
கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஹிந்தி படத்தில் நடிக்கும் பார்வதி
"சக்தே இந்தியா", "ராக்கெட் சிங்" போன்ற படங்களை இயக்கிய ஷிமித் அமின் இப்படத்தை இயக்குகிறார். இதில் கார்த்திக் ஆர்யன் ஒரு விமானியாக நடிக்கிறார். பார்வதி எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கு முன்னதாக ஹிந்தியில் பார்வதி இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!