‛கிங் ஆப் கோதா ஹிந்தி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அக் 15, 2023
Advertisement
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக மலையாளத்தில் தயாரான ‛கிங் ஆப் கோதா" திரைப்படம் வெளியானது. பிரபல மலையாள சீனியர் இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் கல்லரக்கல் வில்லனாக நடித்திருந்தார். மிகப்பெரிய ஆக்சன் படமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறியது.
50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மொத்த 40 கோடி மட்டுமே திரையரங்குகள் மூலம் வசூலித்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது. சரியாக தற்போது ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் வரும் அக்டோபர் 20ஆம் தேதி முதல் இந்த படம் ஹிந்தி ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…