
சல்மான்கானை கொலை செய்ய திட்டம் : டிஜிபி அதிர்ச்சி தகவல்
செப் 12, 2022
Advertisement
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு தொடர்பாக டிஜிபி கவுரவ் யாதவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் திட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாலிவுட் நடிகர் சல்மான்கானை குறிவைத்து மும்பையில் நோட்டமிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக ஜூன் மாதம் அவருக்கும், அவரது தந்தை சலீம் கானுக்கும் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. சல்மான்கானை கொலை செய்ய சம்பத் நெஹ்ராவுடன் இணைந்து ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. இதுகுறித்து மே 30ம் தேதி போலீஸாருக்கு தெரிய வந்தது. அவருக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!