
பாய்காட் டிரெண்டிங்கை மீறி வசூலிக்கும் பிரம்மாஸ்திரா
ஆனால், கடந்த இரண்டு நாட்களில் இந்தப் படம் 70 கோடிகளைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் இன்றைய வசூலுடன் 100 கோடியைக் கடந்துவிடும் என்கிறார்கள். தென்னிந்தியாவிலும் படத்தின் வசூல் மோசமாக இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சுமார் 5 கோடிக்கு விற்கப்பட்ட படம் அந்த வசூலை முதல் நாளிலேயே பெறறுவிட்டதாம். நேற்றுடன் படத்திற்கான "பிரேக் ஈவன்" கிடைத்துவிட்டது என்கிறார்கள். இரண்டாம் நாளிலேயே படம் லாபத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும், இனி வசூலாகும் தொகை கூடுதல் லாபக் கணக்கில்தான் சேரும் என்றும் தகவல்.
தமிழிலும் கூட இப்படம் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஹிந்தி வசூல் எவ்வளவு போகும் என்பது அடுத்து வரும் நாட்களில் தெரியும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!