
மராத்தியில் பேச சொன்னபோது ஜெயில் கதை சொல்லி சமாளித்த சஞ்சய் தத்.
ஆனால் சஞ்சய் தத்தோ மராத்தி மொழி பேசுவதில் ரொம்பவே வீக்.. இருந்தாலும் சமாளிக்கும் விதமாக மைக்கை பிடித்த சஞ்சய் தத், "பிரதாப் பாய், நான் ஆறு ஆண்டுகள் எரவாடா சிறையில் இருந்தேன். அப்போதும் கூட என்னால் மராத்தி கற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கு அந்த மொழியில் சிறிதளவு மட்டுமே தெரியும்" என்று கூறியவர், அடுத்து அமைச்சரின் தோளில் கை போட்டு தங்களது நட்பு குறித்து ஹிந்தியில் பேச ஆரம்பித்து சமாளித்தார். அவரது இந்த சமாளிப்பு பேச்சு சோசியல் மீடியாவில் பலருக்கு நகைச்சுவையாக இருந்தாலும், ஒரு சிலர் "இத்தனை வருடங்கள் மகாராஷ்டிராவில் குடியிருந்து கொண்டு மராத்தி தெரியாமல் இருக்கிறாரே" என்று விமர்சன கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!