
100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
ஏப் 17, 2025
Advertisement
பாலிவுட்டில் நடிகர்கள், நடிகைகள் மட்டும் பிரபலமல்ல. அவர்கள் வசிக்கும் வீடுகளும் அங்கு பிரபலம். யார், யார் எவ்வளவு பிரம்மாண்டமான வீடுகளில் வசிக்கிறார்கள், அவர்கள் வீடுகளில் எத்தனை விலை உயர்ந்த கார்கள் உள்ளன என்பதெல்லாம் கூட அங்கே செய்திதான்.
பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தம்பதியினருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் புதிய வீட்டில் குடிப்போக வேண்டும் என காத்திருந்து, விரைவில் புதிய வீட்டிற்குப் போக உள்ளார்கள்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் உள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில்தான் அவர்கள் விரைவில் குடியேறப் போகிறார்கள். 11 ஆயிரம் சதுர அடி கொண்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்பு அது. அதன் கடைசி 16 முதல் 20 மாடியில் 1300 சதுர அடி மொட்டி மாடி உட்பட்ட அந்த வீட்டின் விலை மதிப்பு சுமார் 100 கோடி என்கிறார்கள். கடற்கரையை நோக்கிய அழகான வீடு என்பதால் அந்த விலையாம். இனி, அந்த வீடுதான் தீபிகா-ரன்வீரின் நிரந்தர வீடு.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!