
போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம்
மே 27, 2022
Advertisement
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் சில மாதங்களுக்கு முன் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை விருந்தில் கலந்துகொண்டார். அப்போது போலீசார் நடத்திய ரெய்டில் 14 பேருடன் சேர்த்து ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த போதைப்பொருள் குறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆரியன் கானுக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை, அவர் அப்பாவி என போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் இந்த வழக்கில் இருந்து அவர் முழுமையாக விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!