
வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப்
இது குறித்து ரன்தீப் கூறுகையில், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் மிக சிறந்த வீரர் ஒருவருக்கு இது ஒரு சல்யூட். ஒரு உண்மையான புரட்சியாளரின் சவாலை என்னால் எதிர்கொள்ள முடியும் மற்றும் அவரது உண்மையான கதையைச் சொல்ல முடியும் என்று நம்புகிறேன். இவ்வளவு காலமாக மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இந்த படத்தில் சொல்லப்படுகிறது என்று எழுதியுள்ளார்.
இயக்குனர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் கூறியிருப்பதாவது: சாவர்க்கரைப் பற்றி மக்கள் மனதில் வெவ்வேறு பதிப்புகள் இருக்கலாம், ஆனால் ஒரு திரைப்படத் இயக்குனராக, சாவர்க்கரின் எண்ணத்தை நான் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். எனவே, படத்தில் வரும் சாவர்க்கரின் கதாபாத்திரத்திற்கும் அவரின் நிஜ வாழ்க்கைக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அவரை எந்த இந்தியனும் என்றும் மறக்க முடியாது, மறக்க கூடாது என்பதை உறுதி செய்வோம். என்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!