சித்தார்த் ராஜ்குமார்
ரகுல் ப்ரீத் சிங் தினமலர் விமர்சனம்
கல்லூரி காதல் கலாட்டா கதையை உடைய படம் "யுவன்" என்றாலும், கண்ணீரை வரவழைக்கும் க்ளைமாக்ஸை உடைய படமும் கூட "யுவன்"!
கல்லூரி மாணவர்களுக்கு காதல், கலாட்டா எவ்வளவு முக்கியமோ, கல்வியும் கவனமும் அதைவிட முக்கியம்! என்பதை வித்தியாசமாகவும், விறுவிப்பாகவும் சொல்லியிருக்கும் படம்தான் யுவன்! வாழ்க்கையில் எல்லாவற்றிலும் "நம்பர்-ஒன்"னாக இருக்கும் மாணவர்கள் எவ்வாறு காதல், கத்திரிக்காய், இத்யாதி, இத்யாதிகளில் சிக்கி வாழ்க்கையை தொலைக்கின்றனர் என்பதை கதாநாயகன் சித்தார்த் ராஜ்குமார் மூலமே கலக்கலாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆர்.என்.சரண்.
சித்தார்த் ராஜ்குமார், ராகுல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் மொத்தமும் தமிழுக்கு புதுசு என்றாலும் பழகிய முகங்கள் போன்றே பளிச்சிட்டிருப்பது படத்தின் பெரிய ப்ளஸ்! காமெடி என்ற பெயரில் ஆங்காங்கே கடிப்பது மைனஸ்!
ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, ஜோஸ்வா ஸ்ரீதரின் இசை உள்ளிட்ட படங்களுடன் கண்ணாமூச்சி காதல்களால் கல்வியை இழக்கும் ஒரு மாணவனின் கண்ணீர் வாழ்க்கையை, கலக்கலாக சொல்லி கவனம் ஈர்க்கிறார் "யுவன்" இயக்குநர் சரண்! அதில் ஒரு சில குறைகள் இருந்தாலும் சபாஷ் சரண்! பேஷ், பேஷ் யுவன்!!