
வரிசை கட்டும் யுவன்ஷங்கர் ராஜாவின் படங்கள்….
அவரது இசையில் அடுத்தடுத்து படங்கள் வெளிவர உள்ளது யுவன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
அடுத்த வாரம் ஆகஸ்ட் 21ம் தேதி யுவன் இசையமைத்துள்ள "பியார் பிரேமா கல்யாணம்" படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்தப் படத்தை அடுத்து ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடித்துள்ள "ஏழு கடல் ஏழு மலை" படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகப் போகிறது.
இதற்கடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள "ஜாலியா இருந்த ஒருத்தன்", யுவனின் பெரியப்பா மகன் ஜெயன் நாயகனாக அறிமுகமாகும் "ராஜாஸ் பிளே லிஸ்ட்", பிரபுதேவா, வடிவேலு இணைந்து நடிக்கும் "பேங் பேங்" ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவை தவிர பத்திற்கும் மேற்பட்ட படங்கள் அவரது இசையில் உருவாகி வருகின்றன.
மேலும், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள "சிக்மா" படத்தில் அவர் பாடிய பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. "ஏழு கடல் ஏழு மலை" படத்திலும் யுவன் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்All the best Yuvan. We are waiting for you.