Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

டூ

டூ,doo
16 ஆக, 2011 - 10:41 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » டூ

தினமலர் விமர்சனம்"முன்தினம் பார்த்தேனே" படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகமான சஞ்சய்யும், மாஜி நாயகி சுமித்ராவின் மகளும், உமாவின் இளைய சகோதிரியுமான நட்சத்திராவும் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம்தான் "டூ". காதலர்களுக்கிடையேயான ஊடலும், கூடலும் தான் "டூ" படத்தின் மொத்த கதையும்!

சாஃப்ட்வேர் லேடியான நட்சத்திராவுக்கும், சார்பதிவாளர் ஊழியரான சஞ்சய்க்கும் காதல். அதுவும் எப்படி...? சஞ்சய்க்கு பிடித்த எதுவும் நட்சத்திராவுக்கு பிடிக்காது. நட்சத்திராவுக்கு பிடித்ததெல்லாம் சஞ்சய்க்கு பிடிக்காது. இப்படி ஒரு ஏழாம் பொருத்த ஜோடி, ஏழேழு ஜென்மம் சேர்ந்து வாழ வேண்டுமென்று காதலித்தால் அது நடக்குமா...? அந்த அதிசயம் நடந்ததா...? இல்லையா....? என்பதை சொல்லும் கதைதான் "டூ"!


"முன்தினம் பார்த்தேனே" படத்தை விட சஞ்சய்யின் நடிப்பில் சபாஷ் சொல்லும் அளவு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. காதலர்களுக்கிடையேயான ஈகோவை சரியாக காண்பித்து நடித்திருப்பதில் பலே சொல்ல வைத்து விடுகிறார் மனிதர். ஆனால் அதேநேரம் பக்கம் பக்கமாக வசனம் பேசும் காட்சிகளில், எந்த காலத்து காதலர்கள் இவர்கள் என முகம்சுளிக்கவும் வைக்கிறார் பாவம்!

சஞ்சய் மாதிரிதான் நட்சத்திராவும் நச் என்ற நடித்திருக்கிறார். வசனக் காட்சிகளில் மட்டும் பச் சொல்ல வைக்கிறார். மற்றபடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் சுமித்ராவின் மகள், அக்கா உமாவிட்ட இடத்தையும் சேர்த்து.... 32 அடி பாய்ந்திருக்கிறார் பேஷ், பேஷ்! மற்றொரு நாயகி சங்கீதா பட், லொள்ளு சபா ஜீவா, மயில்சாமி, ஊர்வசி உள்ளிட்டவர்கள் படத்திற்கு பலம் சேர்க்கும் மற்ற சில பாத்திரங்களாக பளிச்சிட்டிருக்கின்றனர்.

அபிஷேக்-லாரன்ஸ் புதிய இரட்டையர்களின் இசையில், டி.ஆர்., எஸ்.டி.ஆர்., (அதாங்க சிம்பு) எல்லாம் பின்னணி பாடுவதில் தியேட்டரே அதிர்கிறது. சி.ஆர்., மாறவர்மனின் ஒளிப்பதிவில் சில இடங்களில் "டூ" காதல் ஓவியமாக கண்சிமிட்டுகிறதென்றால் மிகையல்ல!

மொத்தத்தில் புதியவர் ஸ்ரீராம் பத்மநாபனின் இயக்கத்தில், "டூ", "வளவள" வசனங்களை தவிர்த்து விட்டுப்பார்த்தால் "பளபள காதல் சண்டை!"வாசகர் கருத்து (14)

satheesh - lugansk,ukraine,இந்தியா
06 அக், 2011 - 15:00 Report Abuse
 satheesh படத்தின் காமெடி சூப்பர் படம் ஓகே பட் நாட் bad .....
Rate this:
பரதப் - St.Petersburg,ரஷ்யா
09 செப், 2011 - 19:52 Report Abuse
 பரதப் ரொம்ப நல்ல படம். ரோம்பனலைக்கு அப்புறம் ஒரு கலப்படம் இல்லாத அதிகம் அலட்டிகத காதல் கதையை இயக்குனர் தந்து இருக்கார்... டூ - நேசம்.
Rate this:
chandu - mdu,இந்தியா
24 ஆக, 2011 - 18:31 Report Abuse
 chandu film ok ..பாக்கலாம் ...தமிழ் பொண்ணு nakshatra ஹீரோயின் நல்லாயிருக்கா
Rate this:
Arun - Covi,இந்தியா
23 ஆக, 2011 - 06:24 Report Abuse
 Arun Don't waste your money. doo is a bad and i hate....
Rate this:
சதீஸ்குமார் - Raspuram,இந்தியா
22 ஆக, 2011 - 17:18 Report Abuse
 சதீஸ்குமார் சூப்பர் படம், காதலிப்பவர்கள் பார்க்கவேண்டிய படம்.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

டூ தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in