3

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : விமல், புகழ், குயின்சி, கஞ்சா கருப்பு, திவ்யா துரைசாமி, பவானி ரெட்டி
இயக்குனர் : ஜெகநாத்
ஒளிப்பதிவு : ராஜேஷ் சுக்லா
ஓடிடி : ஜியோ ஹாட்ஸ்டார்
நேரம் : 3 மணிநேரம் 37 நிமிடம் (5 எபிசோட்)
வெளியான தேதி : 28.03.2025
ரேட்டிங் : 3/5

ஓம் காளி ஜெய் காளி தொடர் ஒரு தீவிரமான ஆக்ஷன் த்ரில்லர் மற்றும் பழிவாங்கும் நாடகமாக உருவாகியுள்ளது. மொத்தம் 5 எபிசோடுகளாக ஏழு மொழிகளில் இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன்,சஸ்பென்ஸ், பழி வாங்குதல் என பல வித்தியாசமான கோணங்களில் வடிவமைத்துள்ளார் இயக்குனர் ஜெகநாத். விமல், புகழ், குயின்சி ஸ்டான்லி, கஞ்சா கருப்பு, மகேஸ்வரி சாணக்யன், பாவனி ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

கதைச்சுருக்கம் : தசரா பண்டிகை கொண்டாடும் சமயத்தில், நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் கிணற்றில் விழுகிறார். அந்த கிணற்றில் பூஜை செய்ய சாமி வேடமேற்று நாயகன் விமல் இறங்குகிறார். கிணத்துக்குள் இருக்கும் அந்த பெண்ணை காப்பாத்துகிறார். அந்த பெண் யார், எதற்காக அவள் கிணற்றில் விழுந்தார், அந்த ஊருக்கும், அந்த பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்பதை ஒரு சஸ்பென்ஸ் கலந்த கதையுடன் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.

நடிகர்களின் பங்களிப்பு : விமலின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமான நடிப்புடன் வெளிப்படுகிறது. விலங்கு வெப் சீரிஸை தொடர்ந்து விமல் ஏற்றிருக்கும் இந்த கதாபாத்திரமும் பெரிதும் பேசப்படும். குயின்சி நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் தோன்றும் குயின்சியின் நடிப்பும் அபாரம். புகழ், கஞ்சா கருப்பு, மகேஸ்வரி மற்றும் பாவனி ரெட்டி ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.

முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டம் வனவாசம் என்ற ஊரை சுத்தியே கதைக்களத்தை அமைத்திருக்கிறார்கள். பாடல்கள், சண்டை காட்சிகள் என பல வடிவங்களில் இந்த வெப் தொடர் ஜொலிக்கிறது.

படத்திற்கு பெரியளவில் மற்றொரு வலு சேர்த்திருப்பது இந்த படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங் வேலைகளும். தசரா திருவிழா நடக்கும் காட்சிகளை அழகாய் படமாக்கிய விதமும், இதை பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் பிரவீன் கே.எல் அவர்களின் எடிட்டிங் எல்லாம் கூடுதல் பலம்.

இந்த தொடரின் கதைக்களம், திரைக்கதை மற்றும் சண்டை காட்சிகள் ஆகியவை அதிரடி மற்றும் திரில்லர் ஆர்வலர்களிடையே வரவேற்பை பெறலாம். நிறைய வலுவான பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் கொடூரமான ரத்த காட்சிகளை காட்டி இருப்பது கொஞ்சம் மன குமுறலை தருகிறது. எதற்கு இந்த அளவுக்கு ரத்த காட்சிகளை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. கொஞ்சம் குறைத்து காட்டி இருக்கலாமோ என்ற கணக்கில் ரசிகர்களின் பொதுவான கருத்தாக இருக்கும்.

ஓம் காளி ஜெய் காளி - பக்தி பரவசம்

 

பட குழுவினர்

ஓம் காளி ஜெய் காளி (வெப் சீரிஸ்)

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓