Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

டாய்லெட் ஏக் பிரேம் கதா (ஹிந்தி)

டாய்லெட் ஏக் பிரேம் கதா (ஹிந்தி),Toilet Ek Prem Katha
  • டாய்லெட் ஏக் பிரேம் கதா (ஹிந்தி)
  • அக்ஷ்ய் குமார்
  • பூமி பத்னேகர்
  • இயக்குனர்: ஸ்ரீ நாராயண் சிங்
12 ஆக, 2017 - 15:13 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » டாய்லெட் ஏக் பிரேம் கதா (ஹிந்தி)

கழிப்பறையின் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". இப்படம் ரசிகர்களை காதலிக்க வைத்ததா என்று இனி பார்ப்போம்...!

கதைப்படி, கேசவ் எனும் அக்ஷ்ய் குமார், மதுராவில் வசிக்கும் 36 வயதை கடந்த திருமணமாகாத கன்னிப் பையன். ஜாதகத்தில் உள்ள தோஷம் காரணமாக அக்ஷ்ய்யின் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒருநாள் ரயில் பயணத்தின் போது ஜெயா எனும் பூமி பத்னேகரை சந்திக்கிறார் அக்ஷ்ய். பார்த்தமாத்திரேத்திலேயே பூமி மீது காதல் கொள்ளும் அக்ஷ்ய், அவரை துரத்தி துரத்தி காதலித்து ஒருவழியாக அந்த காதலில் ஜெயித்து திருமணமும் செய்து கொள்கிறார். திருமணம் எல்லாம் நடந்து முடிந்த நிலையில் அக்ஷ்ய் வீட்டில் கழிப்பறை இல்லாததால் அவருடன் வாழ முடியாது என்று கூறுகிறார். தன் வீட்டிற்கும் மட்டுமல்லாது, தனது ஊருக்கே கழிப்பறை இல்லாததை கண்டு களமிறங்கும் அக்ஷ்ய், பல போராட்டங்களுக்கு பின்னர் எப்படி தன் வீட்டிற்கும், ஊருக்கும் கழிப்பறை கொண்டு வந்து தன் மனைவியுடனும் சேர்ந்து வாழ்கிறார் என்பது டாய்லெட் படத்தின் மீதிக்கதை.

அக்ஷ்ய் குமாரின் நடிப்பு படத்திற்கு படம் மெருகேறி கொண்டே செல்கிறது. சமீபத்திய இவரது ஒவ்வொரு படங்களும் அவ்வளவு அருமையாக வந்ததை போன்று டாய்லெட் படத்திலும் அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார்.

நடிப்பில் அக்ஷ்ய் குமாருக்கு துளியும் சளைத்தவர் அல்ல என்று போட்டி போட்டுக் கொண்டு நடித்து அசத்தியிருக்கிறார் பூமி. இது இவரின் இரண்டாவது படமா என கேட்கும் அளவுக்கு இருப்பது தான் சிறப்பு.

அக்ஷ்ய், பூமியை போன்றே சுதிர் பாண்டே, திவேந்து சர்மா உள்ளிட்ட படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீ நாராயண் சிங், டாய்லெட் படத்தை இயக்கியிருக்கிறார். சந்தேகமே வேண்டாம், அவ்வளவு அருமையாக படத்தை இயக்கியுள்ளார். ஒரு சீரியஸான சப்ஜெக்ட்டை எப்படி சொன்னால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நன்கு அறித்து, அதை காமெடியாகவும், அதேசமயம் சிந்திக்க வைக்கும்படியும் சொல்லி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தின் முற்பாதி நிறைய காமெடிகளுடன் விறுவிறுப்பாக செல்கிறது. பிற்பாதி கொஞ்சம் இழுவையாக தெரிந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது.

டாய்லெட் ஒளிப்பதிவு, வசனம் உள்ளிட்டவைகளும் கூடுதல் வலு சேர்த்திருக்கிறது. அதேசமயம், ஹேன்ஸ் மேட் பகலி பாடலை தவிர மற்ற பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லாதது குறையாக தெரிகிறது.

ஒரு வீட்டிற்கு டிவி, பேன், போன் போன்றவைகளை விட கழிப்பறை தான் முக்கியம், சுத்தம் அவசியம் என உரக்க சொல்லி வெளிவந்திருக்கும் "டாய்லெட் ஏக் பிரேம் கதா" பாராட்டுதலுக்குரியது.

மொத்தத்தில், "டாய்லெட் ஏக் பிரேம் கதா - சுத்தம் பிளஸ் தரம்!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in