Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கூட்டத்தில் ஒருத்தன்

கூட்டத்தில் ஒருத்தன்,Kootathil Oruthan
28 ஜூலை, 2017 - 14:12 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கூட்டத்தில் ஒருத்தன்

எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு , எஸ்.ஆர்.பிரபு, "டிரீம் வாரியர் பிக்ஷர்ஸ் "- "ரமணியம் டாக்கீஸ் " த.செ. .ஞானவேல் எழுத்து , இயக்கத்தில் அஷோக் செல்வன் - ப்ரியா ஆனந்த் ஜோடியுடன் நாசர் , சமுத்திரகனி , பால் சரவணன் , ஜான் விஜய் , ரமா , மாரிமுத்து ,அனுபமா ... உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்க, சமூக அக்கறையுடன் வந்திருக்கும் லவ் - சென்டிமென்ட் நிரம்பிய கமர்ஷியல் படமே "கூட்டத்தில் ஒருத்தன்".


ஸ்கூலில் மிடில் பென்ச்சில் அமர்ந்தபடி , படிப்பிலும் , பழக்க வழக்கங்களிலும் ஆவரேஜாக இருக்கும் மாணவன் காதலில் விழுந்ததால் சாதனையாளனாகும் கதை . அந்த சாதனைகள் கள்ளத்தனமாக நடந்தேறியதா ? நல்லத்தனமாக நிகழ்ந்ததா..? இறுதியில் அவனது காதல் ஜெயித்ததா ? அவன் நிஜமாக சாதித்தானா ..? என்னும் வித்தியாசமும் , விறுவிறுப்பு மான காட்சிப்படுத்தல்கள் தான் " கூட்டத்தில் ஒருத்தன் " படத்தின் வாசம் , ஹாசம் எல்லாம்.


மிடில் பென்ச் மாணவன் அரவிந்த்தாக அஷோக் செல்வன் , அசாதாரண கதாநாயகராக அசத்தியிருக்கிறார்.


" பத்திரிகைகாரங்க லாயர் இல்ல.. ஆனா ,கோர்ட்டுக்கு போகணும் .பத்திரிகையாளர்கள் டாக்டர் இல்ல ... ஆனா ஹாஸ்பிடல் போகணும் .அதனால நான் ஜெர்னலிசம் படிக்கப் போறேன் ... ", என ப்ரியா டி.வியில் சொன்னதை , கேட்ட விட்டு , ஜெர்னலிசம் படிக்க கிளம்புவதில் தொடங்கி , "நான் உன்ன பாலோ பண்ணல ...ஆனா லவ் பண்றேன் ... " எனறு நடிப்பதில் தொடர்ந்து ,


" எங்க சார் கிடைக்குது இந்த சாதனை ...? சாதிச்சாதான் காதல் வருமா சார் ? மனுஷனா பொறந்தாலே காதல் வரும் வரும் , நான் காதலிப்பதே சாதனைதான் சார் .. ..சுத்தி நூறு பேர் இருக்கும் போது தனிமையா பீல் பண்ணி இருக்கீங்களா சார் ..?" என சமுத்திரகனியிடம் குடித்துவிட்டு.புலம்புவது வரை சகலத்திலும் யதார்த்தமாக பொருத்தி நடித்திருக்கிறார். அதிலும் , தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கி சமுத்திரகனியின் வாய் பேச முடியாத மகனை காப்பாற்றி, அதன் மூலம் வாழ்க்கையில் மாற்றம் முன்னேற்றம் எல்லாம் காண்பது எதிர்பாராத ட்விஸ்ட் .


"இப்படி ஒரு பையனை லவ் பண்ணனும் என நான் நினைக்கிற மாதிரி ஏதாவது சாதிச்சுட்டு வா அப்புறம் லவ் பண்றேன் ...நீ ,என்ன லவ் பண்ண ஆயிரம் ரீவன் இருக்கலாம் நான் உன்னை லவ் பண்ண ஒரு ரீசன் கூட இல்ல ... நீயூம் நானும் பிரண்ட் யா இருக்கக் கூட முடியாது .." என ஆரம்பத்தில் அரவிந்த் - அஷோக்கிடம் பரபரப்பதில் தொடங்கி ,


"ஒரு உயிரை காப்பாத்தறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா ?" என அவரிடம் விழுவது வரை., தான் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் ஜனனி எனும் பாத்திரத்தில் வரும் ப்ரியா ஆனந்த் , இயல்பாக இருக்க ,நடிக்க ... பெரிதும் முயற்சித்து தோற்றிருக்கிறார்.


மனோவாக பாலசரவணன் செம்ம காமெடி.


"சூசைடு ரேன்ஜுக்கு அவ ஒர்த்த டா ...இவளுங்களை எல்லாம் நீங்க தான் டா ஏத்தி விடுறீங்க ....", என ப்ரியா ஆனந்துக்காக , தற்கொலைக்கு முயற்சிக்கும் அஷோக்கையும் அந்த ஒற்றை டயலாக்கை வாயிலாக , ப்ரியா ஆனந்தையும் கலாய்ப்பதில் தொடங்கி , "ஒரு நாயைக் காணும் னு தேடு தேடுன்னு தேடுறாங்களே ... உன் வீட்டுல பாம் உன்னை தேட மாட்டாங்களா ?" என நாயகியின் தோழியை நக்கலடிப் பதில் தொடர்ந்து , " என்னடா பார்க்கிறதுக்கு பழை ரம்யா டான்ஸ் மாதிரி இருக்கு ... இது தான், ஜூம்பா டான்ஸுங்கற ... " என்றும் ,"மொத்த சாக்லெட்டையும் ஒண்ணா வாயில போட்டுக்கிற குழந்தை மாதிரி , என்ன பாஸ் எல்லா பொண்ணுங்களையும் நீங்களே மொத்த மா சாப்பிடுறீங்க ... " என ஹீரோவை சதாய்பது, "பேரு கேட்டா மதம் பேரு சொல்றீங்க நீங்க மதம் பிடிச்ச பெண்ணா ?" என எக்கச்சக்க "பன்ச் " அடிப்பது வரை மனிதர், மொத்தப் படத்தையும் எங்கும் தொங்காது பார்த்து கொள்கிறார்.சபாஷ்!


நாயகன் நாயகி படிக்கும் கல்லூரியின் முதல்வர் குணசீலன்- நாசர் ,


"நீ ஒரு புல்லட் யூஸ் பண்ணினா ஆயிரம் கேள்விக்கு பதில் சொல்லணும் .... நான் ஆயிரம் புல்லட் யூஸ் பண்ணினாலும் ஒரு கேள்வியும் கிடையாது ." என நிஜம் பேசியபடி


சற்றே ஓவர் (ஆக்டிங்கிலும் ... ) என்றாலும் போலீஸையே போட்டுத் தாக்கும் சத்யா -சமுத்திரகனி , போலீஸ் இன்ஸ் யோகேந்திரன் -ஜான் விஜய், , நாயகரின் தாயாராக ரமா ,


" குழந்தையை காப்பாத்தறது .... குருவிக்கு சோறு வைக்கறது ... பிச்சைக்காரனுக்கு காசு குடுக்கறது ...."இதெல்லாம் இவனுக்கு சோறு போடாது என பெற்ற பிள்ளையைகரித்துக் கொட்டி , அதே நேரம் சிக்கலான நேரங்களில் கரிசனமும் காட்டும் , நாயகரின் தந்தை மாரிமுத்து , நாயகியின் தாயாராக அனுபமா .. உள்ளிட்டோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


லியோ ஜான் பால் படத்தொகுப்பில் பின் பாதி டிராமா டிக் , சினிமா டிக் காட்சிகள் சற்றே தவிர்க்கப்பட்டிருக்கலாம். பி.கே.வர்மா ஒளிப்பதிவில் , மொத்தப் படமும் பக்காவாக ஒளிர்ந்து மிளிர்ந்திருக்கிறது .


நிவாஸ் கே பிரசன்னா இசையில், "ஏன்டா இப்படி ..." "இன்னும் என்ன செல்ல..." , "மாற்றங்கள் ஒன்றே தான் ... ", "நீ இன்றி ... ", "ஒரு நாள் காதல் ... " ஆகிய ஐந்து பாடல்களும் பின்னணி இசையும் சுபராகம்.


த.செ .ஞானவேலின் எழுத்து , இயக்கத்தில் இன்டர்வெல்லுக்கு முன்னும் பின்னும் கொஞ்சமே கொஞ்சம் டிராமாடிக்காகவும் , சினிமா டிக்காவும் இருந்தாலும் , யாருமே உணவை வீண் செய்தல் கூடாது ...எனும் நல்ல மெஸே ஜுக்காகவும் ,


"மரணம் , பிரிவு , தோல்வி இது 3-ல் எது நடந்தாலும் ஒரு மனிதனோட வாழ்க்கை தலை கீழா மாறிடும் ஆனா , என் வாழ்க்கையில இது மூன்றுமே நடந்தது...." ,


"கொள்ளை அடிச்ச வங்க, கொலை பண்ணினவங்க எல்லோருக்கும் ஜெயில்ல 3 வேளை சாப்பாடு கிடைக்குது .ஆனா , மனநலம் பாதிக்கப்பட்டோர் ஏழை எளியவங்க இதுக்கெல்லாம் காரணம் அன்பு பற்றாக்குறைதான் ....தானா எல்லாமே மாறிடும்னு நினைச்சப்போ , எதுவுமே மாறலை .... நான் மாறினப்போ தான் எல்லாம் நல்ல விதமா நடந்துச்சு...." என்பது உள்ளிட்ட பாசிடீவ் "பன்ச் "களுக்காகவும் , படம் முழுக்க பரவி , விரவி நிரவிக் கிடக்கும் பாலசரவணனின் காமெடிகளுக்காகவும்


"கூட்டத்தில் ஒருத்தன் " படத்தை, பார்க்கலாம் ரசிக்கலாம் , கொண்டாடலாம்!


மொத்தத்தில் , "கூட்டத்தில் ஒருத்தன் -தனித்து தெரிகிறான்! சற்றே ஜொலிக்கிறான்!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in