விமர்சனம்
ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் கதையில் நடிகர் பிரவின் தபாஸ், பல இடங்களில் ஆச்சர்யப்படும் அளவுக்கு சிறப்பான நடிப்பையும் வழங்கியிருக்கிறார். பல இடங்களில் என்னடா இப்படி நடித்திருக்கிறார் என்று கேள்வி கேட்கவும் வைத்திருக்கிறார்.
துருவ் பாலி, பூஜா பத்ரா, ஓமி வைத்யா என ஏகப்பட்ட பேர் நடித்திருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக யாரும் கவரவில்லை. குறிப்பாக நடிகை பூஜா, தனக்கு படத்தில் ஒரு முக்கியமான ரோல், படம் முழுக்க பயணிக்கும் ரோல் என்று கூறியிருந்தார். ஆனால் சில காட்சிகளில் தான் அவர் வருவது ஏமாற்றம்.
அறிமுக இயக்குநர் விஜித் சர்மா, மிரர் கேம் படத்தை இயக்கியிருக்கிறார். அறிமுக இயக்குநர் என்பதாலோ என்னவோ ஒருவித பயத்துடனே படத்தை இயக்கி இருப்பார் போல.... நிறைய லாஜிக் மீறல்களும், தவறுகளும் படத்தில் ஆங்காங்கே தென்படுகின்றன. அதுவும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை சஸ்பென்ஸ் இல்லாமல் கொண்டு போய் உள்ளார். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வசனங்கள் போன்றவையும் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.
மொத்தத்தில், மிரர் கேம் - ஏமாற்றம்!
ரேட்டிங் : 2/5















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!