Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பெபிகர் (ஹிந்தி)

பெபிகர் (ஹிந்தி),Befikre
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் பெபிகர்.
10 டிச, 2016 - 13:09 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பெபிகர் (ஹிந்தி)

‛பாஜிராவ் மஸ்தானி' படத்தின் வெற்றிக்கு பிறகு ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம், எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் பெபிகர். இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...

கதை முழுக்க முழுக்க பிரான்சிஸில் படமாக்கப்பட்டிருக்கிறது. டில்லையை சேர்ந்த தரம் எனும் ரன்வீர் சிங், நண்பன் உதவியால் பிரான்ஸில் ஒரு நைட் கிளப்பில் ‛ஸ்டாண்ட்-அப் காமெடி' பண்ணும் வாய்ப்பை பெறுகிறார். ஒருநாள் இவர் பாரீஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சைரா எனும் வாணி கபூரை சந்திக்கிறார். அப்போது முதல் இருவருக்குள்ளும் நல்ல பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் காதல், கல்யாணம் போன்றவைகள் எல்லாம் இல்லாமல் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' வாழ்க்கையை வாழலாம் என்று முடிவெடுத்து அதன்படியே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஏகப்பட்ட நெருக்கம், முத்தம் என சிறகை விரித்து பறந்து வருகிறது இந்த ஜோடி. ஒருநாள் அன்யா எனும் அர்மான் ரல்கான் வாணி கபூரின் வாழ்க்கையில் என்ட்ரியாகிறார். ஒருக்கட்டத்தில் வாணியை அவர் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். இந்த செய்தி ரன்வீருக்கு எட்ட அதிர்ச்சியாகும் ரன்வீர், கோபத்தில் கிறிஸ்ட்டினி எனும் பெண்ணை தான் திருமணம் செய்யப்போவதவாக அறிவிக்கிறார். மீண்டும் ரன்வீர்-வாணி இணைந்தார்களா...?, இல்லை அவரவர் வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுத்து கொண்டார்களா...? என்பது பெபிகர் படத்தின் கலகலப்பான, கலர்புல்லான மீதிக்கதை.

பெபிகர் படத்தில் ரன்வீர் சிங்கின் நடிப்பு கொஞ்சம் சுமார் தான். ஏற்கனவே நாம் அவரது முந்தைய படங்களில் பார்த்து பழகிய நடிப்பு தான் வெளிப்படுகிறது, புதிதாக ஒன்றுமில்லை, இருந்தாலும் அவர் தன் ரோலை சூப்பர் என்று இல்லாவிட்டாலும் ஓகே என்ற அளவில் நடித்துள்ளார்.

வாணி கபூர், அழகாக அதேசமயம் கவர்ச்சியாகவும் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். நடிப்பும் ஓகே,.

விஷால் சேகரின் இசையில் பாடல்களும், மிக்கியின் பின்னணி இசையும் படத்தோடு சேர்ந்து காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. பிரான்ஸை அழகாக படமாக்கியிருக்கும் கநேமின் ஒளிப்பதிவு ஓவியப்பதிவு. நம்ரதா ராவ்வின் படத்தொகுப்பு பக்கா.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் ஆதித்யா சோப்ரா, முழுக்க முழுக்க இளைஞர்களை குஷிப்படுத்தும் வகையில் பக்காவாக படமாக்கியிருக்கிறார். கதையும் சரி திரைக்கதையும் சரி வேகமாக நகர்வதுடன் ரசிகர்களுக்கு மிகவும் என்டர்டெயின்-ஆகவும் உள்ளது. இருந்தாலும் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' உறவு, முத்தக்காட்சி... கவர்ச்சி... என இளைஞர்களை மட்டுமே குறிவைத்து படமெடுத்து, குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ரசிகர்களை திருப்திப்படுத்தாமல் விட்டிருப்பது பலவீனம்!

மொத்தத்தில் ‛பெபிகர்' - இளைஞர்களுக்கு மட்டும் ‛கலர்புல்'



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in