Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மெர்லின்

மெர்லின்,Merlin
  • மெர்லின்
  • விஷ்ணுபிரியன்
  • நடிகை:அஸ்வினி
  • இயக்குனர்: கீரா
23 பிப், 2018 - 13:20 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மெர்லின்

நடிப்பு - விஷ்ணுப்பிரியன், அஸ்வினி, ஜீவா, முருகதாஸ் மற்றும் பலர்
இயக்கம் - கீரா
இசை - கணேஷ் ராகவேந்திரா
தயாரிப்பு - ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ்
வெளியான தேதி - 23 பிப்ரவரி 2018
நேரம் - 1 மணி நேரம் 50 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

தமிழ் சினிமாவைப் பிடித்த பேய் என்று விலகுமோ என்று தெரியவில்லை. ஒரு வலிமையான பேய் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. யாரும் எந்த மந்திரவாதியையும் அழைத்து அந்தப் பேயை விரட்டுவதாகத் தெரியவில்லை. மாறாக அந்த பேய்க்குள் பலர் விழுந்து வருவதுதான் மிச்சம்.

வளரும் இயக்குனர்கள், அறிமுக இயக்குனர்கள், அனுபவ இயக்குனர்கள் என பலரும் பேய்ப் படங்களைக் கொடுக்க ஆசைப்படுவது எந்த விதத்தில் சரி எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் இயக்குனர் கீரா இதற்கு முன் 'பச்சை என்கிற காத்து' என்ற படத்தை இயக்கி பேசப்பட்டவர்.

விஷ்ணுப்ரியன், ஜீவா உள்ளிட்ட நண்பர்கள் உதவி இயக்குனர்களாக இருப்பவர்கள், ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். விஷ்ணுவுக்கு ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரது படத்தின் கதைக்காக எழுத வேண்டிய பேய்க் கதையை விளையாட்டாக நண்பர்களிடம் அவரது அறையிலேயே இருப்பது போல கற்பனையாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர் சொன்னது போலவே உண்மையான பேய் வந்து அவரைப் பிடித்து ஆட்டுகிறது. அதனால், மனநலம் பாதிக்கப்படுகிறார். அவரை சிகிச்சைக்காக அவரது ஊருக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

விஷ்ணுப்பிரியன் இதற்கு முன் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரது நடிப்பில் ஒரு அலட்டல் தெரிகிறது. உதவி இயக்குனராக கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர் முகத்தில் அதற்கான வருத்தம் துளி கூட இல்லை. பேயால் பயப்படும் காட்சிகளில் மட்டும் நடிப்பதற்கு முயற்சித்திருக்கிறார்.

பிளாஷ்பேக்கில் விஷ்ணுப்பிரியன் காதலியாக அஸ்வினி. சில நிமிடங்கள் மட்டுமே வருகிறார்.

விஷ்ணுப்பிரியன் நண்பர்களாக ஜீவா, ஆடுகளம் முருகதாஸ் இன்னும் சில பலர். படப்பிடிப்பு நடக்கும் போது முருகதாஸ் இடது கண்ணில் ஏதோ கோளாறு போல இருக்கிறது. அதைக் கூட பொருட்படுத்தாமல் படம் முழுவதும் அப்படியே படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே அறைக்குள்ளேயே நகர்கிறது. விதவிதமான கோணங்களில் அந்த அறையைக் காட்ட முயற்சித்தாலும் ஒரு குறும்படத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.

கணேஷ் ராகவேந்திரா இசையில் 'ஆகாய நிலவே...' பாடல் மட்டும் இனிமையாக ஒலிக்கிறது.

ஒரு படமாக உருவாக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் அப்படி என்ன கதை இருக்கிறது எனத் தெரியவில்லை. ஒரு குறும்படமாக இருபது நிமிடத்தில் கூட இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கலாம். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நமது பொறுமையை சோதிக்கிறார்கள்.

மெர்லின் - மெலிவு



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in