Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஆடடுகுன்டம் ரா (தெலுங்கு )

ஆடடுகுன்டம் ரா (தெலுங்கு ),Aatadukundam Raa
  • ஆடடுகுன்டம் ரா (தெலுங்கு )
  • நடிகர்: சுஷாந்த்
  • சோனம் பஜ்வா
  • இயக்குனர்: கி.நாகேஷ்வர் ரெட்டி
21 ஆக, 2016 - 11:30 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஆடடுகுன்டம் ரா (தெலுங்கு )

நாயகன் - சுஷாந்த்

நாயகி - சோனம் பாஜ்வா

இயக்குனர்- கி.நாகேஷ்வர் ரெட்டி


சுஷாந்த் நடித்திருக்கும் ஆடடுகுன்டம் ரா படத்தை காமெடி படங்களில் வெற்றி கண்ட் இயக்குனர் கி.நாகேஷ்வர் ரெட்டி இயக்கியிருக்கிறார்.


ஆனந்த்(ஆனந்த் ராம்) மற்றும் விஜய் (முரளி சர்மா) இருவரும் நெருங்கிய நண்பர்கள், இருவரும் வெவ்வேறு தொழில்கள் செய்துவருகிறார்கள். இப்படியான நிலையில் ஒரு நல்ல நாளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ஆனந்த் தன்னை ஏமாற்றி இருப்பதாக நினைத்து அவருடனான நட்பை முறித்து கொள்கிறான் விஜய்.


பிறகு என்ன சினிமாவிற்கே உண்டான இலக்கணத்திற்கு ஏற்ப சரியாக 26 வருடங்கள் கழித்து விஜய்யின் மருமகனான கார்த்திக் (சுஷாந்த்) பிரச்சனையில் இருக்கும் தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக வெளி நாட்டில் இருந்து இந்தியா வருகிறார். வந்த இடத்தில் விஜய்யின் மகள் ஸ்ருதியை (சோனம்) பார்த்ததும் காதல் வருகிறது. அப்புறம் என சில பல பாடல்கள் பாடுகிறார்கள்.


கார்த்திக்கு ரகசியமான மறுபக்கமும் இருக்கிறது. அந்த மறு பக்கம் என்ன? அவர் இந்தியா வந்ததன் உண்மை காரணம்? நண்பர்கள் இணைந்தனரா? கார்த்திக்கின் காதல் கைகூடியதா என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைகிறது படத்தின் மீதிப்பாதி.


கார்த்திக்காக - சுஷாந்த் நடிப்பில் முந்தைய படங்களில் இருந்து தேறியிருக்கிறார். நடனமும் இந்த புதிய தோற்றமும் நன்றாவே இருக்கிறது. அதேபோல் சோனம் பாஜ்வா அறிமுக படத்தில் ஓரளவிற்கேனும் நடித்திருக்கிறார். பிரித்வி சிற்சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இடைவெளி காட்சி எதிர்பார்ப்பை ஏற்றுகிறது. கெளரவ தோற்றத்தில் வந்து தலைகாட்டும் அகில் மற்றும் நாகசைத்தன்யாவை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.


படத்தில் புதிதாக சொல்வதற்கு என்று ஏதும் இல்லை. பழக்கப்பட்ட அதே கதைதான். முதல் இருபது நிமிடங்கள் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. அதுவும் படம் கிளைமேக்ஸை நோக்கி நகர ஆரம்பித்தவுடம் படம் போரடிக்க துவங்குகிறது. தேவையற்ற இடத்தில் வரும் பாடல்கள், ஏற்கனவே மெதுவாக செல்லும் படத்தின் வேகத்தை இன்னும் குறைக்கிறது. இதை தவிர்த்திருக்கலாம்.


அனுப் ரூபனின் பின்னணி இசை குறிப்பிடும் படியாக இருக்கிறது. எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் படம் பெயர்சொல்லும் படி அமைந்திருக்கும். பழக்கப்பட்ட கதையை பொழுதுபோக்காக சொல்லிய விதத்தில் இயக்குனரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். மொத்தமாக, பழக்கப்பட ஃபார்முலாவில் தாயாரான புது படம் அவ்வளவே.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in