தெலுங்கு தேசத்தின் இந்த வார வெளியீடு கமர்ஷியல் படங்களுக்கு பெயர் போன கோபிசந்தின் சௌக்கியம். முந்தைய படத்தில் சற்றே சோதனை முயற்சி செய்தவர் இம்முறை விவரமாக ஒர் பொழுதுபோக்கு கதை அம்சம் கொண்ட படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கியிருப்பவர் ரவிக்குமார் இருவரும் இதற்கு முன்பு 2004ம் ஆண்டில் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
சரி இப்போது கதைக்கு வருவோம்,எல்லா பொழுதுபோக்கு படம் போல இதிலும் கதை அதேதான். நாயகன் நாயகிக்கு இடையே காதல், பெண்வீட்டில் வேறு திருமண ஏற்பாடு நடக்கிறது, அப்படி நடந்தால் அது ஒரு வில்லனுடன் நிகழ வேண்டுமே அதுவும் நடக்கிறது. அப்புறம் என்னதான் திருமணம் முடிவானாலும், ஜோடி சேரப்போவது என்னவோ நாயகன் தான். அந்த விதி தவறாமல் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த கதையில் அவ்வப்போது பாடல்கள் மற்றும் சண்டைகள், அனேக இடங்களில் நகைச்சுவை காட்சிகள் சில இடங்களில் உணர்வுபூர்வமான காட்சிகள் இதை எல்லாம் சேர்த்தால் படம் ரெடி. முதல் பாதி முழுக்க காதலும் நகைச்சுவையும் கலந்துகட்டி கடக்கிறது, அனேக இடங்களில் பார்ப்பவர்களை சிரிக்கவும் வைக்கிறது. கோபிசந்த அழகாக இருக்கிறார், முந்தைய படத்தைவிட நடிப்பில் மெருகேறி இருக்கிறார்.
உடல்மொழியும் சரியாக பொருந்துகிறது, பாடல்காட்சிகளும் நன்றாக வந்திருக்கிறது ரெஜினாவும் அழகாவ வருகிறார் போகிறார். சில இடங்களில் அவரது முக பாவனைகள் செயற்கையாக தோன்றுகிறது. பின் சிற்சில இடங்களில் உதட்டின் அசைவு சரியாக பொருந்தி போகவில்லை. குறிப்பாக கோபிசந்த் நகைச்சுவை மற்றும் சண்டை காட்சிகளில் நன்றாக மெனெக்கெட்டு நடித்திருக்கிறார்.
முன்பாதி முழுவது காதலில் திளைத்தாலும், இரண்டாம் பாதி ஆக்ஷ்னில் தடம் மாறுகிறது. அவ்வப்போது வரும் பாடல்கள் பாதிப்பை ஏற்படுத்தாமல் கடந்து செல்கிறது. அனு ரூபனைன் இசையில் மெலடி மட்டும் கொஞ்சம் கவனிக்க வைக்கிறது.எனினும் படத்தின் வேகத்திற்கு தடையே இந்த பாடல்கள் தான்.
படம் நம்ம ஊரு ஹரி படம் போல் சும்மா தடதடத்து செல்கிறது, சண்டை காட்சிகளில் உழைத்திருக்கிறார்கள். ஆனால் இல்லாமே புவிஈர்ப்புக்கு எதிராக நிகழ்கிறது. பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.பலவீனம் என்று பார்த்தால், பழைய கதை சொல்லல் யுக்தி தான். நம்மால் அடுத்து அடுத்து வரும் காட்சிகளை சொல்ல முடிகிறது. அதை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மொத்தமாக தர்க்கரீதியிலான ஆய்வை தவிர்த்து விட்டு படம் பார்த்தால் ரசிக்கலாம்.
சௌக்கியம் - பார்த்து ரசிக்கலாம்