Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஜிகினா

ஜிகினா,Jigina
  • ஜிகினா
  • விஜய் வசந்த்
  • சான்யதாரா
  • இயக்குனர்: ரவி நந்தா ‌பெரியசாமி
25 ஆக, 2015 - 16:37 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜிகினா

தினமலர் விமர்சனம்




ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி, ரவி நந்தா பெரியசாமி என தனது பெயரில் மட்டும் பெரிய மாற்றத்துடன் மாத்தி யோசிக்காமல் வழக்கமான சினிமாத்தனத்துடன் இன்றைய பாஸ்ட்ஃபுட் உலகத்தின் புதிய பேஸ்புக் காதலை களமாக கொண்டு இயக்கி இருக்கும் படம்தான் ஜிகினா.


கால் டாக்ஸி ஓட்டுனரான பாவாடைசாமி எனும் விஜய்வசந்த், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கொடைக்கானல் தற்கொலை பாறை முனைக்கு வருகிறார். அவரது கருபபு நிறம், கடுப்பேற்றும் பெயர், ஐ.டி. வாலிபர்கள் மாதிரி ஜாலியாக வாழ முடியாத வருத்தம் மற்றும் ஒருதலைக்காதல் உள்ளிட்ட நான்கு காரணங்களே அவரது தற்கொலை முடிவுக்கு காரணம்.


விஜய் வசந்த் மாதிரியே தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் தற்கொலை பாறை முனைக்கு வருகிறார் வீட்டுவேலை செய்யும் யுவதி கருகமணி எனும் ஸ்ரீதேவி. இவரால் அவரது தற்கொலையும் அவரால் இவரது தற்கொலையும் தடுத்து நிறுத்தப்படுவதுடன் இருவருக்குமிடையேயான உயிரோட்டமான உறவையும் சொல்லி பளபளத்திருக்க வேண்டிய ஜிகினா, இயக்குநரின் பழைய பாணி திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தால் வளவள என்று வழுக்கி சென்று ரசிகனை கொல்ல முயற்சிப்பதுதான் ஜிகினாவின் பெரிய பலவீனம்.


விஜய்வசந்த், கருப்பு நிற வாலிபராக., கதையின் நாயகராக., கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கும் மனிதர். தன் நிறத்தை சொல்லி அடிக்கடி கவலைப்படுவது இன்றைய கருப்பை விரும்பும் காலத்திற்கு அவ்வளவு பொருத்தமாக இல்லை.


விஜய்வசந்தின் பேஸ்புக் காதலி சானியதாராவைக் காட்டிலும் கருகமணி ஸ்ரீதேவிக்குதான் நடிக்க நிறைய வாய்ப்பு அம்மணியும் (ஸ்ரீதேவி) அதை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனாலும் வீட்டு வேலை செய்யும் இடத்தில் லேப்-டாப்பிலேயே அம்மணி ஸ்ரீதேவி முதலாளியம்மாவின் பெயரிலே அவரது ஃபோட்டோவுடன் பேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்து வேறு ஒருவரின் பெயரில் இருக்கும் விஜய் வசந்தின் பேஸ்புக் அப்டேட் மெசேஜூக்கு பதில் மெஸேஜ் அனுப்புவது, நெட்டிலேயே போன் கால் பேசுவது எல்லாம் டூ-மச்! த்ரி-மச்!!


மாடலிங் புகைப்படக்கலைஞர் ஒருவரது முகத்திலும், பெயரிலும் பேஸ்புக் கணக்கில் இருக்கும் விஜயவசந்தும், பின்னணி பாடகி சானியதாரா முகத்திலும், பெயரிலும் பேஸ்புக்கில் இருக்கும் கருகமணி - ஸ்ரீதேவியும் இறுதியில் இணைவது மாதிரி அந்த புகைப்பட கலைஞரும், சானியதாராவும் நிஜக்காதலர்களாக இருப்பது எதிர்பாராத திருப்பம் என்றாலும் ரொம்பவே சினிமாட்டிக் சிரிப்பும் கூட!


"கும்கி " அஸ்வின் கோஷ்டியும் காமெடி ஓகே. ரவிமரியா, சிங்கம்புலி உள்ளிட்ட திறமைசாலிகளும் அவர்களது திறமையும் காமெடி எனும் பெயரில் வீணடிக்கப்பட்டிருப்பது பலவீனம்.


பாலாஜி வி. ரங்காவின் ஒளிப்பதிவு, ஓவியப்பதிவு, ஜான் பீட்டர்ஸின் இசையில் பாடல்கள் இதம். ஆனாலும் என்ன? ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் "கருப்பனுக்கு கருப்பி தான் என இயக்குநர் இப்படத்தின் மூலம் புதிய நியதி சொல்ல முயன்றிருப்பதும்,தெரிந்த இருவர், அதுவும் நிஜத்தில் காதலர்களாக இருக்கும் இருவரது புகைப்படத்துடன் கூடிய பெயரில் வேறு இருவர் பேஸ்புக்கில் லவ்வுவது எல்லாம் லாஜிக்காக இடிக்கிறது. அந்த இருவரது பேஸ்புக் கணக்கு எந்த பெயரில் இருக்கும்? எந்த புகைப்படத்தி்ல் இருக்கும்...? அது ஒரிஜினல் பெயரில் இருந்திருந்தால் இவர்கள் கணக்கை திறந்து பார்க்கும்போதெல்லாம் அடுத்தடுத்து இவர்கள் பெயரில் உள்ள பேஸ்புக் கணக்கிற்கு முன்னும் பின்னும் புகைப்படத்துடன் அந்த கணக்கும் பளிச்சென தெரிந்திருக்குமே.?! அதை இவர்களும் நிச்சயம் கவனிக்க தவறியிருக்க மாட்டார்களே.,?!" என நாம் யோசிப்பது மாதிரியே இயக்குநர் ரவிநந்தா பெரியசாமியும் யோசித்திருந்தார் என்றால் ஜிகினா வளவள எனத்தெரியாமல் பளபள என பளபளத்திருக்கும்! ஜொலித்திருக்கும்! அவ்வாறு இல்லாதது ஜிகினாவை பளபள அல்ல வளவள என்று சொல்ல வைத்துவிடுகிறது, பாவம்!....


ஜிகினா - அவ்வளவு பளபளப்பு இல்லைங்கண்ணா!!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in