Rajathi Raja

முதல் பக்கம் »

இசை ஆரம்பம்

எழுத்தின் அளவு:

ஹிந்தி பாடல்களை நோக்கி சென்ற தமிழர்களை, தன் இசையால் மீட்டெடுத்தவர் இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில், ராமசாமி - சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு மகனாக 1943 ஜூன் 2ல் பிறந்தார். இயற்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.

இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றியவர். பண்ணைப்புரத்தில் மாலை நேரங்களில், அதன் சாலைகளில் மனம் போன போக்கில் பாடிக்கொண்டு நடந்தவர் இளையராஜா.

கம்யூனிஸ்ட் கட்சி பிராசார பாடகராக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் உருவாகியிருந்தார். ஆர்மோனியத்தை தலையில் சுமந்தபடி அண்ணன் போன பாதையில் தொடர்ந்தவர் இளையராஜா. 1958-ல் திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு முன், பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது அவரது தாய், இளையராஜாவை உதவிக்கு அழைத்துப் போ என்றார். அண்ணனுக்குப் பதில் இவர் வாசித்த இசை, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றது. அண்ணனுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எந்த ஊருக்கு சென்றாலும் ஒரு கச்சேரிக்கு ரூ.40, அநேகமாக அதைக்கூட பெற முடியாத நிலை, 1958-68 காலக்கட்டத்தில் தொடர்ந்தது. பாட்டு கேட்க வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு, சகோதரர்களுடன் (பாஸ்கர், கங்கை அமரன்) சென்னைக்கு ரயில் ஏறினார் இளையராஜா.

என் அன்னையின் திருவாக்கில் தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று திருச்சி இசை நிகழ்ச்சிகளில் பெரிய கூட்டம் எனக்கும், என் பாட்டுக்கும் என்று இளையராஜாவே கூறியிருக்கிறார்.

முதல் பக்கம் »
Advertisement
Advertisement