ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை |
பாலிவுட்டில் பிரபலமான ஜோடியாக விளங்குகிறார்கள் ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி. ரன்பீர் கபூரின் 29வது பிறந்தநாள் விழா அண்மையில் நடந்தது. இந்த பிறந்த நாளையொட்டி தன்னுடைய காதலர் ரன்பீர் கபூருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் ஒரு மலைப்பகுதி ரிசார்ட்டை ஆலியா பட் புக் செய்திருக்கிறார். கிரானைட் கற்களால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்ட இந்த அழகான அருமையான ரிசார்ட், பார்ப்பதற்கே கொள்ளை அழகுடன் விளங்குகிறது. இப்பகுதியின் மலைவாழ் மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் கிடைக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த ரிசார்ட், இங்கு தங்குபவர்களுக்கு ஒரு வைல்டு அனுபவம் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு இரவுக்கு சுமார் ரூ.1 முதல் ரூ. 1 1/2 லட்சம் என்று கூறப்படும் இந்த ரிசார்ட்டில்தான், ஆலியா பட், தன் காதலர் ரன்பீர் கபூர் புக் செய்திருக்கிறார். மேலும் ரன்பீர் கபூருடன் கடற்கரையோரம் சென்று ஆலியா பட், தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து 'ஹேப்பி பர்த்டே மை லைப்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இவர்கள் இருவரும் ஜோத்பூர் விமான நிலையத்திற்கு வந்தடைந்த புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த நிலையில் தன்னுடைய காதலருக்காக இப்படி ஒரு ரிசார்ட் புக் பண்ணி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆலியா பட்டின் நெகிழ்ச்சி செயல், நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.