அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

ஹிந்தியில் தயாராகி உள்ள படம் ஆதார். இதனை தேசிய விருது பெற்ற இயக்குனர் சுமன் கோஷ் இயக்கி உள்ளார். வட இந்திய கிராமம் ஒன்றில் ஆதார் கார்ட் வாங்கினால் குடும்பத்துக்கு ஆகாது என்ற ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. அதையும் மீறி அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் ஆதார் கார்டு வாங்கி விடுகிறார். 
ஆதார் எண்ணை கூட்டி கழித்து பார்த்த கிராமத்து பூசாரி  அவர் மனைவி இறந்து விடுவார் என்று குறி சொல்கிறார். இதனால் பயந்துபோன அந்த இளைஞர் தனது ஆதார் எண்ணை மாற்ற முயற்சிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றழித்து விட்டபோதும் ஆதார் அட்டைகள் வழங்கும் உதய் அமைப்பு படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் படம் வெளிவரவில்லை. ஆதார் கார்டு பற்றிய தவறான தகவல்களை படம் கொண்டிருப்பதாக அது குற்றம் சாட்டுகிறது. 23 இடங்களில் காட்சிக்கு கத்திரி போட வேண்டும் என்று உதய் கேட்டு வருகிறது.
இதுகுறித்து இயக்குனர் சுமன் கோஷ் கூறியிருப்பதாவது: இந்த படம் ஆதார் அட்டைக்கு ஆதரவான படம். அப்படியான ஒரு படத்துக்கு தடை விதிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பொதுவான ஒரு குழு அமைத்து அவர்கள் படம் பார்த்து முடிவு செய்யட்டும். என்கிறார்.
 
           
             
           
             
           
             
           
            