Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம்

13 மார், 2026 - 03:07 IST
எழுத்தின் அளவு:
Kumbh-Mela-girl-Monalisa-Bhosle-marries-boyfriend-Farman-Khan-in-Kerala
Advertisement


கடந்த ஆண்டு நடந்த கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்ற மோனலிசா என்ற இளம் பெண் சமூக வலைதளங்களில் திடீர் பிரபலமானார். அவரது அழகும், காந்த கண்களும், வசீகர சிரிப்பும் அனைவரையும் கவர்ந்தது. அவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே. இந்த திடீர் பிரபலத்திற்கு பிறகு அவருக்கு பாலிவுட் சினிமா வாய்ப்புகள் வந்தது. தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. இதற்காக வந்திருந்த மோனலிசா திருவனந்தபுரத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் அருமனூர் நயினார் கோவிலில் முகமது பர்மான் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

இஸ்லாம் மதத்தை சேர்ந்த முகமது பர்மானை மோனலிசா கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இது மாதம் மாறிய காதல் என்பதால் இருதரப்பு குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்தால் கேரளாவிற்கு வந்த இடத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

"நான் இந்து முறைப்படிதான் திருமணம் செய்து கொண்டேன். இது 'லவ் ஜிகாத்' கிடையாது. நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். எல்லா மதங்களையும் சமமாகவே கருதுகிறேன். இது தனது சுய விருப்பத்தின் பேரில் நடந்த திருமணம். கேரளா பாதுகாப்பான இடமாகத் தெரிந்ததால் இங்கு திருமணம் செய்துகொண்டோம்" என்று மோனலிசா தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானதுசாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ... ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap