'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

விஜய் நடிப்பில் கடந்த 2000ல் வெளியான படம் 'புதிய கீதை'. ஜெகன் இயக்கிய இந்த படத்தில் பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு தற்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு ஜாமின் இல்லாத பிடிவாரண்டை பிறப்பிக்கப்பட்டுள்ளது மொரதாபாத் நீதிமன்றம்.
கடந்த 2017ல் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டு நடனம் ஆடுவதற்காக அமீஷா பட்டேலுக்கு 14.5 லட்சம் சம்பளம் பேசப்பட்டு முழுத் தொகையும் தரப்பட்டது. ஆனால் குறித்த தேதியில் அவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சிக்கு அவரை ஒப்பந்தம் செய்த விழா ஏற்பாட்டாளர் பவன் வர்மாவிடம் பத்து லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்தார் அமீஷா பட்டேல்.
ஆனால் மீதி 4.5 லட்சம் தொகையை அவர் கொடுக்காததால் மொரதாபாத் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார் பவன் வர்மா. ஆனால் ஒவ்வொரு முறை சம்மன் அனுப்பப்பட்டும் அமீஷா பட்டேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதை தவிர்த்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் விதமாக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள அமீஷா பட்டேல், 'இது ரொம்ப ரொம்ப பழைய கதை. பவன் வர்மாவிற்கு நான் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகையை செட்டில் செய்து விட்டேன். அது குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. அப்படி இருந்தும் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் இப்படி வழக்கு தொடர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய வழக்கறிஞர்கள் இது குறித்து ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.