பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ என்ற படத்தில் அறிமுகமான மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அதையடுத்து ரவி மோகனுடன் ஜீனி என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்தாண்டில் மலையாளத்தில் இவர் நடித்து வெளியான லோகா சாப்டர் 1 என்ற படம் 300 கோடி வசூல் செய்தது. அந்த வகையில் மோகன்லாலின் வசூல் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் கல்யாணி பிரியதர்ஷன். தற்போது தமிழில் மார்ஷல் என்ற படத்தில் கமிட்டாகியுள்ள கல்யாணி பிரியதர்க்ஷன் அடுத்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.
துரந்தர் படத்தை அடுத்து ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ஜாம்பி தொடர்பான படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். ஜெய்வேதா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிப்பதற்கு ஆலியா பட்டிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தை தென்னிந்திய ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கல்யாணி பிரியதர்ஷனை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.