அமெரிக்கா வசூல் : 9 வருட சாதனையை முறியடித்த 'துரந்தர் 2' | 'டகாய்ட்' படத்தில் ஜோனிடா காந்தி நடனம் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | எங்களை நாங்களே கலாய்ச்சிப்போம் : 'எல்ஐகே' குழு | கல்லூரி விழாக்களில் நடிகைகளின் 'கிளாமர் நடனம்' : சமூக வலைத்தளங்களில் கண்டனம் | திருவிளையாடல், அவள் ஒரு தொடர்கதை, பைசன் : ஞாயிறு திரைப்படங்கள் | பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் |

இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட தாதா சாகேப் பால்கே வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கு இயக்குனர்கள் ராஜமவுலி, ராஜ்குமார் ஹிரானி ஆகியோருக்கு இடையே சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் தாதா சாகேப் பால்கே படம் உருவாகிறது என தகவல் வெளியானது. அதேசமயத்தில் ராஜமவுலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயா இணைந்து 'தாதா சாகேப் பால்கே' வாழ்க்கையை பின்னணியாக கொண்டு படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இந்தக் கதையில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தியும் வெளியானது.
இதைத்தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி, அமீர்கான் இணைந்து தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை படத்தை அக்டோபரில் துவங்குவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான பணிகள் நடந்து வந்தன. ஆனால் திரைக்கதை அவர்களுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் அமையவில்லையாம். இதனால் இந்த படத்தை கைவிட ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் முடிவு செய்துள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் தற்போது ராஜமவுலிக்கு போட்டியில்லாமல் தாதா சாகேப் பால்கே படத்தை உருவாக்க வாய்ப்பு வந்துள்ளது என்கிறார்கள்.