புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

ஷனீல் டியோ இயக்கத்தில், பீம்ஸ் செசிரோலியோ இசையமைப்பில், அட்வி சேஷ், மிருணாள் தாகூர், அனுராக் காஷ்யப், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'டகாய்ட்'.
இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'டச் பட்டி' பாடல் நேற்று வெளியானது. அப்பாடலை போஜ்புரி நடிகர், பாடகர் பவன் சிங், பாடகி ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளார்கள். அதோடு அவர்களும் இந்தப் பாடலில் நாயகன் அட்வி சேஷ் உடன் நடித்துள்ளார்கள்.
பாடலின் முக்கிய அம்சமே ஜோனிடா காந்தியின் நடனம்தான். அவரது கிளாமரான உடையும், அசத்தலான நடனமும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளதோடு, அதிர்ச்சியடையவும் வைத்துள்ளது.
தனி பாடல்களில் நடனமாடும் சில நடிகையர் போலவே ஜோனிடாவும் நடித்துள்ளார் என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
தமிழில், சில சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் ஜோனிடா காந்தி. ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் பாடியவர். தமிழில் இளம் முன்னணி இசையமைப்பாளர் ஒருவருடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர்.




