பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

1998ல் வெளியான ஹிந்தி படம் ‛பியார் கியா டூ தர்ணா கயா'. சல்மான் கான், இவரது சகோதரர் அர்பாஸ் கான், தர்மேந்திரா உள்ளிட்ட பலர் நடித்தனர். நீண்ட இடைவெளிக்கு பின் தர்மேந்திரா உடன் இணைந்து நடிக்கிறார் அர்பாஸ் கான். ‛மைனே பியார் கியா பிர் சே' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சபீர் ஷேக் இயக்குகிறார். பிபிசி மோஷன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கிறது.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அதில் தர்மேந்திரா, அர்பாஸ் கான், நடிகை வித்யா மாலவதே, உதித் நாராயண், திலீப் சென், ராஜ்பால் யாதவ், சோனு பகத், கணேஷ் ஆச்சார்யா, யோகேஷ் லக்கானி, கங்கனா சர்மா, தீபக் திஜோரி ஆகியோர் கலந்து கொண்டனர். திலீப் சென் இசையமைக்கிறார்.
தர்மேந்திரா கூறுகையில், ‛‛ 'மைனே பியார் கியா பிர் சே' ஒரு கலவையான படம். எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளது. ரோனி ரோட்ரிக்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். அர்பாஸ் கானுடன் முன்பு 'பியார் கியா தோ தர்ணா கியா' படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இந்த புதிய படத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்திருப்பது மகிழ்ச்சி'' என்றார்.
"தர்மேந்திரா உடன் மீண்டும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறேன். படத்தின் கதை, வசனம் மற்றும் கதாபாத்திரங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. இதில் நடிப்பதற்கு உற்சாகமாக இருக்கிறேன்" என்றார் அர்பாஸ்கான்.