துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஹிந்தியில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் 2004ல் வெளியான படம் 'காக்கி'. அமிதாபச்சன், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது நடிப்பில் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை மறைந்த பிரபல தயாரிப்பாளர் கே.சி ராமசாமி என்பவர் தயாரித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் கே சி ராமசாமியின் மகன் அரியமான் ராமசாமி.
காக்கி திரைப்படம் வெளியாகி இருபதாவது வருடத்தை தொட இருப்பதால் வரும் 2024ல் அதைக் கொண்டாடும் விதமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் நிகழும் விதமாக புதிதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான காக்கி படத்துடனும் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த அனைவருமே நடிக்கிறார்களா என்பது உள்ளிட்ட விவரங்கள் இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார்.