நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங் ஆப் கோதா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படி ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு இந்த புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சிறப்பு விருந்தினர்களாக தெலுங்கு நடிகர்கள் ராணா மற்றும் நானி இருவரும் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் ராணா, துல்கர் சல்மானின் குணாதிசயம் பற்றி புகழ்ந்து பேச துவங்கினார்.
அப்போது துல்கர் சல்மான் நடித்த ஹிந்தி படம் ஒன்றின் படப்பிடிப்பிற்கு தான் சென்றபோது, அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த கதாநாயகி படப்பிடிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனில் யாருடனோ சத்தமாக பேசிக் கொண்டிருந்ததையும் துல்கர் சல்மான் எந்தவித டென்ஷனும் ஆகாமல் அதை பொறுமையாக கடந்து சென்றதையும் பற்றி கூறினார்.
அவர் அப்படி குறிப்பிட்ட அந்த நடிகை சோனம் கபூர் தான் என பலரும் சோசியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சோனம் கபூர் பற்றி தான் பேசவில்லை என்றும் அப்படி பேசியதாக நினைத்தால் இதற்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் குறுகிய மனம் கொண்டவர் என ராணாவின் பேச்சு குறித்து தனது சோசியல் மீடியா பதிவில் மறைமுக பதிலடி கொடுத்துள்ளார் சோனம் கபூர்
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் வெளிநாட்டு அறிஞர் எலினோர் ரூஸ்வெல்ட் என்பவர் கூறிய, “குறுகிய மனம் கொண்டவர்கள் மனிதர்களை பற்றி விவாதிப்பார்கள். சராசரி மனம் கொண்டவர்கள் நிகழ்ச்சிகளை பற்றி விவாதிப்பார்கள்.. நல்ல மனம் கொண்டவர்கள் ஐடியாக்களை பற்றி விவாதிப்பார்கள்” என்பதை மேற்கோள் காட்டியுள்ளார். இதன்மூலம் ராணாவை குறுகிய மனம் கொண்டவர் என பதிலடி கொடுத்துள்ள சோனம் கபூர், “சில மனிதர்களை பற்றி தெரிந்துகொள்ள உதவிய ஒரு சிறிய விஷயம் இது” என்றும் கூறியுள்ளார்.