'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தன்னிடம் பிச்சை கேட்டு வந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் ரொம்பவே கடுமையாக நடந்து கொண்டார் என்பது போன்று சில புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் சோசியல் மீடியாவில் வெளியாகி, இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து தனது தரப்பு விளக்கத்தை கூறியுள்ளார் பிரீத்தி ஜிந்தா.
இதுபற்றி அவர் கூறும்போது, “அன்றைய தினம் ஷாப்பிங் சென்று விட்டு எனது காரை எடுப்பதற்காக வெளியில் வந்தேன். அப்போது சம்பந்தப்பட்ட அந்த மாற்றுத்திறனாளி நபர் என்னிடம் காசு கேட்டு வழி மறித்தார். கடந்த சில வருடங்களாகவே என்னிடம் அவர் இப்படி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். என்னிடம் பணம் இருக்கும்போது அவருக்கு கொடுத்து உதவி இருக்கிறேன்.
அன்றைய தினம் என்னிடம் பணமாக எதுவும் இல்லாமல் கிரடிட் கார்டு மட்டுமே இருந்தது. அதுமட்டுமல்ல நான் அன்றைய தினம் குறித்த நேரத்தில் விமான பயணமும் மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதனால் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு என்னுடைய காரை எடுத்த முயற்சித்தேன். அந்த சமயத்தில் என் அருகில் நின்றிருந்த பெண்மணி அவருக்கு சில்லறை காசுகள் கொடுத்தார். ஆனால் அது போதவில்லை என்கிற கோபத்தில் அவற்றை அந்த பெண்மணியின் முன்பாகவே தூக்கி எறிந்த அந்த நபர் அந்த பெண்மணியையும் பணம் தராத என்னையும் வசைபாட ஆரம்பித்தார்.
நான் காரை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பியபோது என் கார் உடனேயே சிறிது தூரம் ஓடி வந்தார். நல்லவேளையாக விபத்து எதுவும் நடக்கவில்லை. நான் ஒரு சினிமா பிரபலம் என்பதாலேயே இந்த விஷயத்தை இந்த அளவிற்கு ஊதி பெரிதாக்கி விட்டார்கள். எங்களுக்கும் சாதாரண மனிதர்கள் போன்ற ஆசாபாசங்கள் உண்டு, மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டு என்பதையும் இப்படி குற்றம் சாட்டுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு செயலுக்கும் இன்னொரு தரப்பு நியாயம் என்பது இருக்கும். அது என்ன என்று தெரிந்து கொண்டு பின்னர் விமர்சிப்பது தான் சரியாக இருக்கும்” என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் பிரீத்தி ஜிந்தா.