''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுக்க புகழ்பெற்ற பாரஸ்ட் ஹம்ப் படத்தை பாலிவுட் நடிகர் ஆமீர்கான், ‛லால் சிங் சத்தா' என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து அவரே தயாரித்து நடித்துள்ளார். அவருடன் கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 11ம் தேதி வெளியாகிறது இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் இணையதளத்தில் பாய்காட் லால்சிங் சத்தா என்ற ஹேஷ்டாக் வேகமாக பரவி வருகிறது. 2015ம் ஆண்டு நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதால் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று தனது மனைவி அறிவுறுத்தியதாகக் கூறினார். அந்த வீடியோக்களை இப்போது பகிரப்பட்டு இந்தியாவை விரும்பாதவர் படத்தை இந்தியர்கள் பார்க்ககூடாது என்று கூறி வருகிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆமீர்கான் என்னை தவறாக புரிந்து கொண்டு என் படத்தை புறக்கணிக்காதீர்கள் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இந்தியாவை பிடிக்காதவன் என்று சிலர் நம்புவது வருத்தமாக இருக்கிறது. அது முற்றிலும் பொய். நான் என் தாய்நாட்டை மிகவும் நேசிக்கிறேன். சிலர் என்னைப் பற்றி தவறாக உணர்வது துரதிர்ஷ்டமானது. என் படங்களைப் புறக்கணிக்காதீர்கள். தயவு செய்து பாருங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.