
முட்டுக்கட்டையால் அப்செட்டில் நடிகை
தளபதி நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டு வரும், மூனுஷா நடிகைக்கு அரசியலில் பேரார்வம் இருந்து வருகிறது. அதனால், தேர்தல் பிரசாரத்தில் தானும் கலந்து கொள்வதாக, தளபதி நடிகருக்கு துாது அனுப்பி இருக்கிறார். ஆனால் அவரோ, "ஏற்கனவே குடும்பத்தில் விவாகரத்து அக்கப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இதுவே, அரசியல் வாழ்க்கையிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நேரத்தில் பிரசாரத்துக்கு வந்தால், இதை வைத்தே எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் எனக்கு எதிராக பெரும் புயலை கிளப்பி விடுவர்..." என்று சொல்லி, நடிகைக்கு தடை போட்டு விட்டார். தளபதி போட்ட இந்த முட்டுக்கட்டையால் கடும், "அப்செட்"டில் இருந்து வருகிறார், மூனுஷா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!