பாலிவுட்டின் மிகச்சிறந்த நடன அமைப்பாளர் பராகான். மைக்கேல் ஜாக்சனின் நடனத்தை பார்த்து ஈர்ப்பான பராகான், அவரைப்போலவே தானும் ஒரு சிறந்த டான்சராக வர வேண்டும் என்று தீவிர முயற்சி மேற்கொண்டார். சினிமாக்களில் குரூப் டான்சராக பணியாற்றிய தொடங்கியவர், பிறகு படிப்படியாக உயர்ந்து நடன அமைப்பாளராக மாறினார். பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலரது படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்த பராகான், ஷாரூக்கானின் நெருங்கிய நண்பர். அதனால் அவர் மூலமாகவே இயக்குநராக அறிமுகமானார்.தற்போது பாலிவுட்டின் பிஸி இயக்குநர் கம் நடன அமைப்பாளராக இருக்கிறார் பராகான்.