உ.பி.,மாநிலம் அலகாபாத்தில் பிறந்த அமிதாப் பச்சனின் சொந்த பெயர் இன்குலாப். கவிஞர் சுமித்ரானந்தன் பன்டின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது பெயரை அமிதாப் என மாற்றிக் கொண்டார். இவரது புனைப்பெயரான ஸ்ரீவட்சவா உடன் தனது தந்தையின் பெரையும் இணைத்து பச்சன் என்ற பெயரையும் வைத்துக் கொண்டார். 1969ம் ஆண்டு சாத் இந்துஸ்தானில் என்ற படத்தில் 7 கதாநாயகர்களில் ஒருவராக நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு வந்தார் அமிதாப் பச்சன். இதனைத் தொடர்ந்து 1971ம் ஆண்டு இவர் நடித்த ஆனந்த் படத்திற்காக சிறந்த குணசித்திர நடிகர் விருதை பெற்றார். அதுனைத் தொடர்ந்து இவர் நடித்த பல படங்களும் இவருக்கு விருதுகளை பெற்றுத் தந்தது. 1970 மற்றும் 80 களில் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த அமிதாப் பச்சன் 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 3 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். தற்போது டிவி ஷோக்கள் பலவற்றையும் நடத்தி வருகிறார்.