என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கோபிகா விஜயன் ஒரு டப்பிங் கலைஞர்... மயிலிறகு வருடல்களை வார்த்தைகளாக்கினால் இவர் குரல் எனலாம்..! இவர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த போது...
அப்பா டி.ஆர்.விஜயன் 35 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கிறார். மண்ணுக்கு மரியாதை, பிரம்ம முகூர்த்தம் படங்களையும் இயக்கியுள்ளார். அவர் பணியாற்றிய தெலுங்கு படத்திற்கான டப்பிங்கில் நாசரின் சிறு வயது மகன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு யதேச்சையாக அமைந்தது.
சிறுவயதில் டப்பிங் பேசினால் பெரிய சாக்லெட் வாங்கி தருவார்கள். அதற்காகவே டப்பிங் ஸ்டுடியோ செல்வேன். பின்னாளில் இவ்வளவு துாரம் பயணிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், பிளஸ் 1 படிக்கும் போது அப்பா டப்பிங் சங்கத்தில் என்னை உறுப்பினராக்கினார். நான் பேசத்தொடங்கும்போது கரண்ட் கட் ஆகி விட்டது. இது இளையராஜா போன்ற ஜாம்பவான்களுக்கே நடந்து உள்ளது என்று அப்பா ஆறுதல்படுத்திய பின்னர் தான் நம்பிக்கை வந்தது.
டப்பிங் துறைக்கு வந்த புதிதில் திடீரென அழ, சிரிக்க வேண்டும் என்பதெல்லாம் சவாலாய் இருந்தன. பின்னர் என்னை தயார்படுத்திக் கொண்டேன். கல்லுாரி நேரம் போக மீதி நேரங்களில் ஸ்டுடியோவே கதி என இருக்கத் தொடங்கியது தான் இன்று ஓரளவு என்னை இத்துறையில் நீடிக்க வைக்கிறது எனலாம்.
முதலில் 'கிரவுட் டப்பிங்' பேசி வந்தேன். அது மிகவும் சிரமமானது. திரைப்படங்களில் அது நமது குரல் தான் என தியேட்டரில் நம்மால் கூட கேட்டுணர முடியாது. பின்னர் படிப்படியாக குறும்படங்கள், சீரியல்கள் எனப் பேசத் துவங்கினேன். கோவிட் காலக்கட்டத்தில் நிறைய மக்கள் அனிமே, வெப் சீரிஸ்கள் பார்க்கத் தொடங்க, அப்படியே வெளிச்சம் டப்பிங் கலைஞர்கள் மீதும் விழுந்தது.
அனிமேக்களின் அறிமுகம் டப்பிங் பேசும் போது தான் கிடைத்தது. அது ஒரு தனி உலகம். STRANGER THINGS, SOLO LEVELIN போன்ற வெப் தொடர்களில் என் குரலுக்கு ரசிகர்கள் ஏராளம்.
திரைப்படங்களில் டப்பிங் பேசும் போதே சீரீயலில் பேசுபவரா நீங்கள் என கேலி செய்வார்கள். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் படத்திற்கு தேவையான அளவு ரியலாக பேசிய பின்னர் பாராட்டத் துவங்கினர்.
கார்த்திகை தீபம், சுந்தரி, லட்சுமி சீரியல்களில் பேசியது நல்ல பெயரை வாங்கித் தந்தது. 'மாஸ்க்' படத்தில் ஒரே டேக்கில் டப்பிங் பேசியது மறக்க முடியாத அனுபவம். டப்பிங் தவிர பாடுவது பிடித்த பொழுதுபோக்கு. என் அப்பாவை போலவே எனக்கும்இயக்குனர் துறையில் ஆர்வம் அதிகம்; அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
மெய்யழகன், டூரிஸ்ட் பேமிலி மாதிரி 'பீல் குட்' படங்களை இயக்க ஆசை என்றார்.
கலைமகளின் வீணை வாசிப்பை கேட்டுக் கொண்டே பிரம்மன் இவர் குரலை படைத்திருப்பாரோ..! என்ற ஐயத்துடன் வாழ்த்து கூறி விடைபெற்றோம்.