பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் |

ஹீரோயின்களாக தான் அறிமுகமாக வேண்டும் என்ற நினைப்பில் பலரும் சினிமாத்துறைக்குள் வரும் இன்றைய காலகட்டத்தில், எந்த வேடமாக இருந்தாலும் சரி அதில் தனி முத்திரை பதித்து வெற்றிக்கொடி நாட்டுவது சிலர் மட்டுமே. சிறிய, பெரிய கேரக்டர் என பாகுபாடின்றி கிடைக்கும் அனைத்தும் வாய்ப்புகளிலும் தனிபாதையை உருவாக்கி சின்னத்திரை, வெள்ளித்திரை என தடம் பதித்துள்ளவர் மதுரையை சேர்ந்த நடிகை அட்சயா. அவர் கூறுகிறார்...
நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே மதுரை தான். 5வது படிக்கும் போது துவங்கிய நடிப்பு பயணம் கணிதத் துறையில் எம்.எஸ்சி., முடித்தும் தொடர்ந்து வருகிறது. படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தம் இல்லையே என நீங்கள் நினைக்கலாம். படிப்பு எனக்காக.. நடிப்பு என்
அப்பாவின் ஆசைக்காக. அப்பா கார் டிரைவர். அவரும் சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்று போராடினார்.
தோல்விகள் மட்டுமே சந்தித்ததால் அதே துறையில் என்னை ஜெயிக்க வைக்க போராடினார். அவர் எதிர்பார்த்தது போல் இன்று நான் சாதிக்க ஆரம்பித்து இருக்கிறேன். முதன் முதலில் 10 வயதில் மலையாள நடிகை ரீமா கலீங்கல்லுடன் விளம்பர படத்தில் நடித்தேன். விளம்பர படங்களை தொடர்ந்து பிளஸ் 1 படிக்கும் போது விஷாலின் மருது படத்தில் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக சினிமாத்துறைக்குள் நுழைந்தேன்.
ஆர்.கே.சுரேஷின் பில்லாபாண்டி படத்தில் குணசித்திர வாய்ப்பு கிடைத்தது. தேவராட்டத்தில் குணசித்திர நடிப்பில் அசத்தினேன். விடுதலை படத்தில் ஒரு சின்ன ரோல் பண்ணினேன். இது தவிர குறும்படம், ஆல்பம், வெப் சீரியல் என கால்பதித்துள்ளேன். நான் வாலிபால் வீராங்கனை என்றால் நம்ப மாட்டீர்கள். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றதால் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் தான் கல்லுாரி படிப்பை தொடர்ந்தேன்.
'டிவி'யில் சிவகாமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். கதாநாயகி என்ற ரியாலிட்டி ஷோவில் வாய்ப்பு கிடைத்தது. இந்த ேஷா நடிப்பு போட்டிக்கானது. பைனலில் நான்கு வெற்றியாளர்களில் மூன்றாவதாக தேர்வானேன். இப்போட்டியின் நடுவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் எனது நடிப்பை பாராட்டியது வாழ்வில் மறக்க முடியாதது. நான் சினிமாவில் நடிக்க, நுாற்றுக்கும் மேற்பட்ட நடிகையர் தேர்வில் பங்கேற்று உள்ளேன். அவர்கள் முதலில் எதிர்பார்ப்பது நமது நிறம் மட்டுமே.
நான் மாநிறமாக இருப்பதால் அதிக முறை ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்துள்ளேன். அதையும் மீறி ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே நடிக்க சொல்லி பார்ப்பார்கள். அதிலும் தேர்வான உடனே வாய்ப்பு கிடைப்பது இல்லை. எனது முகச்சாயல் கிராமத்து கதாபாத்திரத்திற்கு மட்டுமே ஒத்துவரும் கூறிவிட்டு, அந்த கதாபாத்திரம் வந்தால் தருகிறோம் என சொல்வார்கள். இப்படி பல போராட்டங்களுக்கு பின் தான் இந்த இடம் எனக்கு கிடைத்தது.
சினிமாவில் நடித்தால் இளம் தலைமுறையினரை வசீகரிக்கலாம், பெண்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் சீரியல்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது சினிமா, சீரியல் என இரு குதிரைகளிலும் சவாரி செய்து வருகிறேன். எதையுமே நேசித்து
செய்தால் வெற்றி பெறலாம் என்றார்.