முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாகவும் வருவேன், மிரட்டல் வில்லனாகவும் அதிரடி காட்டுவேன் என படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் கலக்கி வரும் நடிகர் பிரசன்னா மனம் திறக்கிறார்...
கொரோனாவுக்கு பின் உங்களை காணோமே
பிஸியாக தான் இருக்கேன்... சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவது குறித்து பேசும் 'பிங்கர் டிப்' வெப் சீரிஸில் போலீசாக நடிச்சிருக்கேன். அடுத்தடுத்து வெப் சீரிஸ் நடிச்சிட்டு இருக்கேன்.
உங்கள் திரைப்பயணம் குறித்து சொல்லுங்க
சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆச்சு. நிறைய வெற்றி, தோல்விகளை பார்த்து இந்த துறையில் இருந்தாலும், போகவேண்டிய துாரம் நிறைய இருக்கு. உற்சாகம் கொடுத்த, எனக்கு ஆதரவு கொடுத்த, அனைவருக்கும் நன்றி.
மிஸ் பண்ணிட்டோமேனு நினைத்த கதைகள்
மிஸ் பண்ணிட்டோம்னு நினைப்பதை விட நிறைய கேரக்டர்கள் நமக்கு கிடைத்தால் நல்லா இருக்கும்னு யோசிப்பேன். சினேகாவிடம் புலம்புவதால் என்னுடன் படம் பார்க்க பயப்படுவாங்க. படம் நல்லா இருக்கா, இல்லையா... அதோடு விடுங்க, என சினேகா கூறுவார்.
சமீபத்தில் அப்படி பாதித்த படம் என்ன படம்
பஹத் பாசில் நடித்த 'டிரான்ஸ்' பார்த்தேன்...மனுஷன் சூப்பரா நடிச்சிருக்கார். அந்த ரோல் எனக்கு வந்தால் நல்லாருக்கும். உங்க நடிப்பில் தமிழில் ரீமேக் செய்தால் நல்லா இருக்கும் என நிறைய பேர் சொன்னாங்க.
இப்ப சினிமாவில் எவ்வளவு மாற்றங்கள் இருக்கு
நிறைய மாறியிருக்கு... குறும்படம் எடுத்து யூ டியூப்பில் போட்டு கிடைக்கும் வரவேற்பை வைத்து படம் வாய்ப்பு வருகிறது. 10 ஆண்டு போராட்டத்துக்கும், 2 குறும்படம் எடுத்து படம் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. ஆனால், எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை வருத்தமாக இருக்கு
உங்கள் தயாரிப்பு படத்தில் நீங்கள் நடிப்பீர்களா
என் தயாரிப்பில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் தொடங்க நினைத்தேன். திறமையானவர்களை தேடி வாய்ப்பும் கொடுப்பேன். விரைவில் தயாரிப்பு நிறுவனம் துவங்குவது குறித்து அறிவிப்பு வரும்.
சினேகாவும், நீங்களும் சேர்ந்து நடிக்கும் கதை
கல்யாணத்துக்கு முன் நிறைய கதை வந்தது. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். இப்போ நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பா நடிப்போம்.
ஹீரோயினுடன் நெருங்கி நடிப்பது குறித்து சினேகா
அப்படி ஒரு வாய்ப்பு எந்த இயக்குனரும் கொடுக்கலை. வில்லனா ஆக்கிறாங்க, இல்லை ஜோடியில்லாம பண்ணிடுறாங்க. 'பிங்கர் டிப்'ல கூட இரண்டு ஹீரோயின். ஆனால், எனக்கு ஜோடி இல்லை.
பிரசன்னா ஒரு நல்ல கணவராக மட்டுமில்லை, நல்ல தந்தையாக கூட இருக்கீங்க போல சொல்லுங்க?
இன்னிக்கு என் பையன ஸ்கூல் விட்டு வந்தது பத்தி சொல்றீங்க. தினம் என்னால் என் மகனை பள்ளியில் கொண்டு போய்விட முடியாது. அதனால் இன்னைக்கு முதல் நாள் என்பதால் அவனை பள்ளியில் விட்டு வந்தேன்,
உங்கள் மகனை பெரிய பள்ளியில் சேர்த்து இருக்கிங்களா எப்படி சொல்லுங்க?
ரொம்ப பெரிய ஸ்கூல்ல பணக்கார பசங்க மட்டும் படிக்கிற பள்ளியில் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். எல்லா தரப்பு மக்களுடன் அவர்கள் வாழ, பழக வேண்டும் என்று விரும்பினோம். அந்த மாதிரி ஒரு சாதாரண பள்ளியில் தான் என் மகனை இரண்டாம் வகுப்பில் சேர்த்து உள்ளோம். அவரும் பள்ளிக்கு செல்ல ரொம்ப ஆர்வமுடன் கிளம்பி விட்டார்.
சினேகா படங்களில் தொடர்ந்து நடிப்பாரா?
வெகு விரைவில் படங்களில் நடிப்பார். தனுஷ் கூட பட்டாசு படத்தில் கடைசியாக நடித்தார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார், தற்போது அந்த குழந்தைக்கு 2 வயது. அதும் பெண் குழந்தை வெளியூர் பட பிடிப்புக்கு அழைத்து செல்ல முடியாது. அதனால் கொஞ்சம் இடைவெளி எடுத்து படங்களில் மீண்டும் சினேகா நடிப்பார்.
சினேகா சமைத்து நீங்க விரும்பி சாப்பிடுவது எது?
அவங்க சமைப்பது எல்லாமே பிடிக்கும், அவங்க சுடு தண்ணி நல்லா வைப்பாங்க . முதல் குழந்தை பிறக்கும் சமயம் எல்லா வேலையும் நாங்கள் தான் பார்த்தோம். அவங்க அப்போ வைத்த சாம்பார் எல்லாம் பிடிக்கும். அப்போ சமைத்தது. அதன் பிறகு எங்க சமைச்சாங்க..
15 வருஷம் பிறகு ரெஜினா கூட நடிக்கிறீங்க சொல்லுங்க?
இங்க அவங்கள கண்ணல காட்டினாங்க. உங்களுக்கு எப்டி நியூஸ் தெரியுமோ அது போல தான் எனக்கும். ரெண்டு பேருக்கும் ஒரு சீன் கூட இல்ல.
உங்களுக்கு பிடித்த நடிகை யாரு?
இப்போது வரை தமன்னா தான்