விருதுகள்
1954 ஆம் ஆண்டு தமிழில் 2வது சிறந்த திரைப்படத்திற்கான "தேசிய விருது" "அந்த நாள்" திரைப்படத்திற்கும், கன்னடத்தில் சிறந்த படத்திற்கான முதல் பரிசை "பேடர கண்ணப்பா" படத்திற்காகவும் கொடுக்கப்பட்டது.
1956 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த படத்துக்கான "தேசிய விருது" ஏ வி எம் தயாரித்த "குல தெய்வம்" திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான "தேசிய விருது" ஏ வி எம் மின் "களத்தூர் கண்ணம்மா" திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
1961 ஆம் ஆண்டு தமிழில் 2வது சிறந்த திரைப்படத்திற்கான "தேசிய விருது" ஏ வி எம் தயாரித்த "பாவமன்னிப்பு" திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டு தமிழில் 2வது சிறந்த திரைப்படத்திற்கான "தேசிய விருது" ஏ வி எம் தயாரித்த "அன்னை" திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
1963 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான "தேசிய விருது" ஏ வி எம் மின் "நானும் ஒரு பெண்" திரைப்படத்திற்கு அளிக்கபட்டது.
1964 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான "தேசிய விருது" ஏ வி எம் மின் "சர்வர் சுந்தரம்" திரைப்படம் தட்டிச் சென்றது.
1965 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான "தேசிய விருது" ஏ வி எம் மின் "குழந்தையும் தெய்வமும்" திரைபடத்திற்கு வழங்கப்பட்டது.
1966 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான "தேசிய விருது" ஏ வி எம் தயாரித்த "ராமு" திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
Advertisement
1986 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த ஜனரஞ்சக திரைப்படத்திற்கான "தேசிய விருது" ஏ வி எம் மின் "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டது.
1968 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான "தமிழ்நாடு அரசு சினிமா விருது" ஏ வி எம் மின் "உயர்ந்த மனிதன்" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான "தமிழ்நாடு அரசு சினிமா விருது" ஏ வி எம் தயாரித்த "சிவாஜி" திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டது.
1963 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான "தென்னக ஃபிலிம் ஃபேர் விருது" ஏ வி எம் மின் "நானும் ஒரு பெண்" திரைப்படத்திற்கு அளிக்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான "தென்னக ஃபிலிம் ஃபேர் விருது" ஏ வி எம் மின் "சர்வர் சுந்தரம்" திரைப்படம் தட்டிச் சென்றது.
1986 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான "தென்னக ஃபிலிம் ஃபேர் விருது" ஏ வி எம் மின் "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டது.
Advertisement