Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

புதுவீடு கட்டிய தாமரைக்கு வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்!

17 செப், 2023 - 11:05 IST
எழுத்தின் அளவு:
Fans-congratulating-Thamarai-who-built-a-new-house!

கோயில் திருவிழாக்களில் வேஷம் கட்டி ஆடும் தெருக்கூத்து கலைஞரான தாமரைச் செல்விக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி புதியதொரு முகத்தை கொடுத்தது. பிக்பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிரடியாக அசத்திய தாமரைக்கு மக்களின் சப்போர்ட்டும் நிறையவே கிடைத்தது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அவர் குணச்சித்திர நடிகையாக சினிமா மற்றும் சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். தனது குடும்ப வறுமை காரணமாக தெருக்கூத்து கலைஞராக பல கஷ்டங்களை சந்தித்த தாமரை தற்போது கைநிறைய சம்பாதித்து தன் குடும்பத்தாரை மகிழ்ச்சியாக வைத்துள்ளார்.

இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை ஏ.மாத்தூரில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்வு இன்று (செப்டம்பர் 17) நடைபெறுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொண்ட தாமரை, வரவேற்பு பத்திரிகையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தாமரையின் வளர்ச்சியை பாராட்டியும் அவர் மேன்மேலும் வளரவும் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வாணிபோஜனின் கிளாமர் புகைப்படங்கள் வைரல்!வாணிபோஜனின் கிளாமர் புகைப்படங்கள் ... என் ஜாதிக்காரங்க கஷ்டப்படுறாங்க : பாக்கியலெட்சுமி கோபியின் பரபரப்பு வீடியோ என் ஜாதிக்காரங்க கஷ்டப்படுறாங்க : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)