காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் | கமலை பார்க்க வேண்டும் என்று சொன்னதுமே அழைப்பு வந்தது : சிங்கம்புலி | விஜய் ரசிகர்களின் தெய்வீகமான அன்பு : பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி | துரந்தர் பட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆஷா கவுடா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிகையானது எப்படி என்ற சுவாரசியமான கதையை தற்போது கூறியுள்ளார்.
ஆஷா கவுடாவுக்கு முதலில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லையாம். அவரது குடும்ப உறுப்பினர் பலரும் ஜிம்மில் டிரெய்னராக இருந்து வந்ததால் இவருக்கும் பிட்னஸ் டிரெய்னராக வேண்டும் என்ற ஆசை தான் இருந்ததாம். சிறிது காலம் ஒரு ஜிம்மில் ஏரோபிக்ஸ் பயிற்சியாளராகவும் வேலை பார்த்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் இவரது சமூகவலைதளம் பேஜை பார்த்த சீரியல் குழுவினர் கதைக்கு பொருத்தமான நாயகி என ஆஷா கவுடாவை ஆடிஷனுக்கு அழைத்துள்ளனர். அங்கே அவரது பெர்மான்ஸ் பிடித்து போகவே அஷா கவுடா வசுந்தராவாக மாறினார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஆஷா கவுடாவுக்கு தமிழ் தெரியாது. ஆனால், கோகுலத்தில் சீதை தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் ஆஷா கவுடா இடம்பிடித்துள்ளார். தன் மேல் அன்பை காட்டும் தமிழ் மக்களின் பாசத்தை நினைத்து நெகிழும் அவர், 'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி' என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.




