நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

ஜி தமிழின் செம்பருத்தி தொடர் தமிழ் சின்னத்திரையில் டாப் ஹிட் சீரியலாக பல நாட்கள் வலம் வந்தது. செம்பருத்தி தொடரின் ஆதி-பார்வதி இடையேயான காதல் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு பல காதல் ஸ்டேட்டஸ்களுக்கு ஆதி-ஷபானா கெமிஸ்ட்ரி டெம்பிளேட் ஆக மாறியது. இது, தொடரின் டிஆர்பிக்கும் முக்கிய காரணமாக இருந்தது வந்தது. இந்நிலையில் கார்த்திக் ராஜ் செம்பருத்தி தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். இதனையடுத்து ஆதி கதாபாத்திரத்தை பிரபல விஜே அக்னி ஏற்று நடித்து வருகிறார். ஆனால், கார்த்திக் ராஜ் விலகிய நாள் முதல் செம்பருத்தி தொடர் சரிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.
கதைக்களத்தில் பல ட்விஸ்டுகளையும் வித்தியாசமான முயற்சிகளையும் சீரியல் குழுவினர் எடுத்து வந்தாலும் செம்பருத்தி தொடரால் பழைய இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது கதையின் சுவாரசியத்தை கூட்டும் வகையில் புதிதாக ஒரு அம்மன் எபிசோடை ஜி தமிழ் முயற்சி செய்யவுள்ளது. அதில், அகிலாண்டேஸ்வரிக்காக மிகவும் கஷ்டமான பரிகாரம் ஒன்றை பார்வதி செய்ய, பார்வதிக்கு உதவும் பொருட்டு ஒன்பது அம்மன்கள் வருவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த ஒன்பது அம்மன்களாக தேவயாணி, நக்ஷத்திரா, ரக்ஷா ஹோலா, தர்ஷனா அசோகன், கீர்த்தனா பொதுவல் உள்ளிட்ட ஜி தமிழின் முன்னணி சீரியல்களில் கதாநாயகிகளாக நடித்து வரும் நடிகைகள் தோன்றவுள்ளனர். இதன் மூலம் மற்ற சீரியல்களின் ஆடியன்ஸ்களையும் செம்பருத்தி சீரியலை பார்க்க வைக்கும் யுக்தியை ஜி தமிழ் முயற்சி செய்யவுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ஜி தமிழ் டிவி நேயர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சரிந்த தொடரை சக்சஸ் பாதைக்கு அழைத்து செல்ல இந்த ஒன்பது நாயகிகள் உதவுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




