ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

காலா, கபாலி படங்களுக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தை மீடியாக்களும், சினிமா விமர்சகர்களும் பாராட்டி, கொண்டாடி தீர்த்தனர். இதன் காரணமாக படம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வையாளர்களை சென்று சேர்ந்தது.
முன்பெல்லாம் படங்கள் தியேட்டரில் 100 நாள் ஓடினால் வெற்றி விழா கொண்டாடுவார்கள். கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை வெள்ளி, சனி, ஞாயிறை தாண்டி படம் தியேட்டரில் இருந்தாலே வெற்றியை கொண்டாடினார்கள். இப்போது படம் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை சென்றடைந்தால் கொண்டாட தொடங்கி இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் சார்பட்டா பரம்பரை படக்குழுவினர் பார்ட்டி வைத்து வெற்றியை கொண்டாடி இருக்கிறார்கள். ரகசியமாக நடந்த இந்த வெற்றி கொண்டாட்டம் வேம்புலியாக நடித்த ஜான் கோக்கன் தனது டுவிட்டரில் வெளியிட்ட படங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆர்யா, பசுபதி, ஷபீர் கல்லரக்கல், ஜான் விஜய், சந்தோஷ், மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.




