வில் அம்பு பட இயக்குனர் மரணம் | ஆகஸ்ட் 14ல் சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரிலீஸ் | 42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி | எனக்கு பிடித்த படம் 'ரிதம்': அர்ஜூன் பேட்டி | ஆலியா பட் சண்டை காட்சிகள்: ஆச்சரியப்பட்ட பாபி தியோல் | வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ் | 'டான் 3' சர்ச்சையை சமரசமாக முடிக்க ரன்வீர் சிங் முயற்சி | கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன் | தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல் | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப் |

தெலுங்கில் தற்போது பிரமாண்ட படங்களாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா, அல்லு அர்ஜுனின் புஷ்பா ஆகிய படங்கள் இறுதிக்கட்ட பணிகளை எட்டியிருக்கின்றன. கொரோனா இரண்டாவது அலை ஓரளவு குறைந்துள்ள நிலையில் இந்தப்படங்கள் தங்களுக்கான ரிலீஸ் தேதிகளை அறிவிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன.
கடந்த வருடம் மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அந்தவகையில் மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படம் வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
ஆனால் தற்போது சூழல் வேறு மாதிரியாக இருப்பதால் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு வசூல் ரீதியாக பாதிப்பு அடைய வேண்டாம் என புஷ்பா படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மகேஷ்பாபு படத்திற்கு முன்னதாகவே இந்தப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




