
வில் அம்பு பட இயக்குனர் மரணம்
கடந்த 2016ம் ஆண்டு ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ, சிருஷ்டி டாங்கே, சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளியான படம் ‛வில் அம்பு". இந்த படத்தை ரமேஷ் சுப்ரமணியம் இயக்கி இருந்தார். அதன்பின் இவரது இயக்கத்தில் படம் எதுவும் வெளியாகவில்லை. எலும்பு புற்றுநோய் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று (மே 28) மரணம் அடைந்தார்.
நாளை காலை கோவையில் உள்ள அவரது சொந்த ஊரான சுகுனாபுரத்தில் இறுதி சடங்கு நடைபெறுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!