திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில் | திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி | ‛கேஜிஎப்-3, சலார்-2' எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல் | தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்! | ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு! | 'ராகதேவன்' உடன் ஒரு ஆனந்தமான, ஆன்மிக பயணம் : கார்த்திக் சுப்பராஜ் | ஹாலிவுட் ஹீ-மேனுக்கு குரல் கொடுக்கும் உன்னி முகுந்தன் | ஆரம்பித்தபோதே நின்றுபோன ராம்சரணின் கனவுப்படம் ; அதற்கு உயிர் கொடுத்த ‛பெத்தி' இயக்குனர் | கேரளா : முதல் நாள் வசூலில் இரண்டாம் இடம் பிடித்த 'த்ரிஷ்யம் 3' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'கருப்பு' |

அனூப் பண்டாரி இயக்கத்தில், சுதீப், நீதா அசோக் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விக்ராந்த் ரோணா'. 3டி-யில் அட்வென்ச்சர் பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபல ஹிந்தி நடிகையான ஜாக்குலின் பெர்ணான்டஸ் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
அவரது கதாபாத்திர அறிமுகமும், போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டன. கதாநாயகன் சுதீப்புடன் இருக்கும் போஸ்டர் ஒன்றும் ஜாக்குலின் தனியாக இருக்கும் போஸ்டர் ஒன்றையும் இன்று படக்குழுவினர் வெளியிட்டார்கள். கடங் ராக்கம்மா என்பது தான் ஜாக்குலினின் கதாபாத்திரப் பெயர்.
கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் ஆகஸ்ட் 19ம் தேதியன்று வெளியாக உள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் அடுத்தடுத்து ஐந்து மொழிகளில் வெளியாகும் சில பான்-இந்தியா திரைப்படங்கள் வெளிவர உள்ளன. அவற்றில் இந்த 'விக்ராந்த் ரோணா' படமும் ஒன்று.
'நான் ஈ' படத்திற்குப் பிறகு சுதீப் நாயகான நடித்த சில கன்னடப் படங்கள் தமிழிலும் டப்பிங் ஆகி வெளிவந்தன, ஆனால், அவற்றிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப் படம் ஒரு பேண்டஸி படம் என்பதால் ரசிகர்களை ரசிக்க வைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.




