பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு |
மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து வெளிவந்த 'சார்லி' படம் தமிழில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க 'மாறா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கடந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
மாதவன் நடித்து இதற்கு முன்பு தமிழில் வெளியான 'சைலன்ஸ்' படமும் ஓடிடியில்தான் வெளியானது. அப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக 'மாறா' படத்திற்கு இரு விதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. திரையுலகத்தைச் சேர்ந்த மாதவனின் நண்பர்கள் படத்தைப் பாராட்டித் தள்ளுகின்றனர்.
சராசரி சினிமா பார்க்கும் ரசிகர்கள் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, மலையாள ரீமேக்கான 'சார்லி' படம் போலக் கூட இல்லை என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் முன்வைக்கின்றனர். அப்படி ஒரு ரசிகர் மாதவனையும் டேக் செய்து, “சார்லி' படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் சீரியசாகவே சராசரிக்கும் கீழான ஒரு படம்தான். முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு படத்தைப் பார்ப்பது வலியாக உள்ளது. இப்படத்தைக் கெடுத்ததே சீரியசாக மாதவன் தான். வருத்தமான, சோர்வான ஒரு கதாபாத்திரம்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அந்த ரசிகருக்கு, “உங்களை ஏமாற்றமடைய வைத்ததற்கு மன்னிக்க சகோதரா. அடுத்த முறை சிறப்பாகச் செய்ய முயற்சிக்கிறேன்,” என மிகப் பணிவாக பதிலளித்துள்ளார். மாதவனின் இந்த பதிலுக்கு ஆயிரக்கணக்கானோர் 'லைக்' தெரிவித்துள்ளனர்.