பார்டர் 2 உடன் துரந்தர் 2 டீசர் இல்லை : இயக்குனர் வெளியிட்ட தகவல் | ரீ ரிலீஸ் மோதலில் விஜய், அஜித் ரசிகர்கள் | பொன்னான நாட்கள் : இளையராஜாவுடன் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்த கிருஷ்ண வம்சி | 50வது நாளில் இந்தியாவில் 1000 கோடியை நெருங்கும் 'துரந்தர்' | பிளாஷ்பேக்: ‛உதயசூரியன்' எம்ஜிஆர் | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் சினிமாவை விட்டு விலகிய வலம்புரிஜான் | ஆஸ்கர் விருதில் புதிய சாதனை: 16 விருதுகளுக்கு போட்டியிடும் 'சின்னர்ஸ்' | 'சிறை' அக்ஷய் குமாரின் புதிய படம் | பீரியட் படத்தில் நடிப்பது பெருமை : டொவினோ தாமஸ் | 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த ஆத்மிகா |

தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்ட் வலம் வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட்டில் தான் அதிகம் நடிக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை குறைத்துவிட்டார். சமீபகாலமாக நடிகைகளின் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் உருவாக்கி மோசடி சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதிதி ராவ், ஸ்ரேயா போன்ற நடிகைகள் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தனர். இப்போது ரகுலுக்கும் இதேபோன்று நடந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛வணக்கம் நண்பர்களே... யாரோ ஒருவர் என்னைப் போல வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்து மக்களுடன் அரட்டை அடிப்பது எனக்குத் தெரிய வந்துள்ளது. இது என்னுடைய எண் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும், எந்த விதமான உரையாடல்களிலும் ஈடுபட வேண்டாம். தயவுசெய்து அதை பிளாக் செய்யவும்'' என குறிப்பிட்டு அந்த போலி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.




