பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

நடிகர் ரவி மோகன் புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி ப்ரோ கோட் என்கிற படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் யோகி என்பவர் இயக்கும் இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். ஆனால் மிகப்பெரிய ஆல்கஹால் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தாங்கள் ப்ரோ கோட் என்கிற பெயரில் மது விற்பனை செய்து வருவதால் இந்த பெயரை டைட்டிலாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும்படி வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த பெயரை டைட்டிலாக பயன்படுத்துவதில் தடை இல்லை என்று கூறியது. ஆனாலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் வழக்கு தொடர்ந்து, இந்த டைட்டிலை ரவி மோகன் பயன்படுத்த இடைக்கால தடை வாங்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் ரவி மோகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜெயம் ரவி தரப்பிலிருந்து வலுவான ஆதாரங்கள் இந்த முறை சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவற்றை கவனமாக பரிசளித்த நீதிமன்றம் ஜெயம் ரவி தரப்பினர் கமர்சியலாக ப்ரோ கோட் டைட்டிலை பயன்படுத்துவதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருக்கும் இதன் அடுத்த கட்ட விசாரணையில் இதுகுறித்த இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..